Erode

News March 27, 2024

அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

image

ஈரோடு அடுத்த காலிங்கராயன்பாளையம் பகுதியில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ரூ.10,35,000 மதிப்புள்ள சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த சேலைகள், ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. எனவே பறக்கும் படையினர் அளித்த புகாரில் அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 27, 2024

ஈரோட்டில் தமாகா வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியான தாமாக வேட்பாளர் விஜயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஈரோடு மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கராவிடம வழங்கினார்.
வேட்புமனு தாக்கலின் போது மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, வழக்கறிஞர் பழனிச்சாமி, ஆகியோர் உடனிருந்தனர்.

News March 27, 2024

ஈரோடு : திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.4.89 கோடி

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில், வேட்பாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் பெயரில் மொத்தம் ரூ.4.89 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பிரகாஷ் பெயரில் ரூ.3,96,849 மற்றும் மனைவி பெயரில் ரூ.35,56,310 கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

ஈரோடு காவல்துறை தேர்தல் பார்வையாளர் நியமனம்

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு காவல்துறை தேர்தல் பார்வையாளராக, ராம கிருஷ்ண ஸ்வரண்கர் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான ராம கிருஷ்ண ஸ்வரண்கர் இன்று முதல் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பணி ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2024

ஈரோட்டில் தபால் வாக்குப்பதிவு படிவம் அனுப்பும் பணி

image

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் பிற மாவட்டத்தில் வாக்கு உரிமை உடைய போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பிரிவு சார்பில் தபால் வாக்குப்பதிவு செய்யும் படிவம் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதில் ஆசிரியர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் தபால் வாக்குச்சீட்டு படிவம் வழங்கப்பட உள்ளது.

News March 26, 2024

ஈரோட்டில் 10 கைத்தறி பூங்காக்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 100 கைத்தறிகள் அமைத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்புவோர் www.loomworld.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

அதிமுக வேட்பாளருக்கு ரூ. 648 கோடி சொத்து மதிப்பு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஆற்றல் அஷோக் குமார் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் ரூ.583 கோடியும், தனது மனைவி பெயரில் ரூ. 65 கோடி என மொத்தம் ரூ648 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளார்.

News March 26, 2024

வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

image

ஈரோடு அடுத்த அக்ரஹாரம் இந்தியா டையிங் மில் கூட்ட அரங்கில் நாளை (மார்ச்.27) ‘நிதி ஆப்கே நிகட் ‘ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

ஈரோடு மாவட்டத்தில் இன்று 166 மையங்களில் தேர்வு

image

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச்.26) துவங்கி, ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 25,663 பேரும், தனி தேர்வர்கள் 1,159 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 25, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை 166 மையங்களில் தேர்வு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26ம் தேதி) துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 25,663 பேரும், தனி தேர்வர்கள் 1,159 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.