India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இணையதளம் மூலம் மொத்தம் 265 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி 249 கடைகளுக்கு அனுமதியும், 7 கடை விண்ணப்பங்கள் நிராகரிப்பும், மீதமுள்ள 9 கடை விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக சத்தியமங்கலம், பவானிசாகரில் 85.60 மி.மீ. மழை பதிவானது. இதேபோல் கொடிவேரி-13.20, நம்பியூர்-3, சத்தி-51, தாளவாடியில், 22 மி.மீ. மழை பதிவானது. மழைக்கு பெருந்துறையில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு தரப்பினர் தற்காலிக பந்தல் அமைத்து, சுவாமி சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மற்றொரு தரப்பிலும் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த சுவாமி சிலை மற்றும் பந்தல்களை அகற்றினர்.
அந்தியூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. அவற்றில் விவசாயிகளுடைய சிறுதானிய உற்பத்தி கண்காட்சி. ஊட்டச்சத்து உட்பட பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது. அவற்றில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சங்கரா கலந்து கொண்டு பார்வையிட்டார். அவருடன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் அலுவலர்கள் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
1045 குளம், குட்டைகள், 1066 கிலோமீட்டர் குழாய் பதித்து, ஆறு நீரூந்து நிலையங்கள் மூலம் திட்டம் செயல்படுகிறது. அத்திக்கடவு அவிநாசி திட்ட ஆலோசனை கூட்டம் 5வது நீருந்து நிலையத்தில் (Pump House) நடைபெற்றது. இதில் L&T பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள், அரசு நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், தன்னார்வ அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். திட்டத்தில் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார். அப்பொழுது சார் பதிவாளராக முத்துக்குமார் இருந்தார். இரவு வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அலுவலர்களிடம் சார் பதிவாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் பிரிவில் சேர அக்.30ம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெக்கானிக் எலக்ட்ரிக் வீக்கில்ஸ், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் என 2 புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 70108-75256 எண்ணில் தொடர்புகொள்ளவும்.
ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ): ஈரோடு, 9.80, கோபி, 63.20, மொடக்குறிச்சி, 1, பெருந்துறை, 7, கொடுமுடி, 20, சென்னிமலை, 5.40, பவானி, 4, கவுந்தப்பாடி, 2.40, அம்மாபேட்டை, 1.80, எலந்தகுட்டை மேடு, 27, குண்டேரிபள்ளம், 8 மி.மீ., மழை பெய்தது. கோபியில் அதிகபட்சமாக, 63.20 மி.மீ., மழையளவு பதிவானது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், நாளை (அக்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் தகவலுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754 12356, 94990 55942 எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் போலீஸ் கேண்டீன் சார்பில் பட்டாசு கடை அமைக்கப்படும். நடப்பாண்டும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்படி எஸ்.பி., அலுவலக போலீஸ் கேண்டீன், ஈரோடு ஆயுதப்படை வளாகம், கோபி, சத்தி என நான்கு இடங்களில் வரும், 26ம் தேதி முதல் பட்டாசு கடை துவங்குகிறது.இங்கு ‘கிப்ட் பாக்ஸ்’ மட்டும் விற்பனை செய்யப்படும்.போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கி கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.