Erode

News April 14, 2024

ஈரோடு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் போன்ற 12 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

ஈரோட்டில் இருந்து சூரத்திற்கு சிறப்பு இரயில்

image

ஈரோட்டில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் – புகா் இரயில் நிலையமான உத்னாவுக்கு நாளை (ஏப்.15) ஒருவழி சிறப்பு இரயில் (எண்: 06099) இயக்கப்படவுள்ளது. ஈரோட்டில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் இரயில் சேலம், பங்காருப்பேட்டை,கிருஷ்ணராஜபுரம், ராய்ச்சூா், சோலாப்பூா், அஹமத்நகா், நந்தூா்பாா் வழியாக, ஏப்ரல் 16 மாலை 4.15 மணிக்கு உத்னா சென்றடையும் என தெற்கு இரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

image

ஈரோடு மாவட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே ஏப்ரல் 17, 18, 19ம் தேதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி ஆகிய 4 நாள்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள் மூடப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா நேற்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

தாம்பூல தட்டுடன் வாக்காளர்களுக்கு அழைப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த வெள்ளிதிருப்பூர் பகுதியில், நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, தாம்பூல தட்டில் தேர்தலுக்கான அழைப்பிதழை வைத்து, கட்டாயம் வாக்களிக்குமாறு வாக்காள பெருமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

News April 13, 2024

ஈரோட்டில் விழிப்புணர்வு

image

தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி மற்றும் தமிழரண் மாணவர்கள் அமைப்பு ஆகியன சார்பில், அன்னைத் தமிழில் வணிகப் பெயர் பலகைகளை மாற்றுவோம், எங்கும் தமிழ், எதிலும் தமிழை நிலை பெறச் செய்வோம் எனும் முழக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.

News April 13, 2024

ஈரோட்டில் ரூ.5.07 கோடி பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று காலை வரை ரூ.5 கோடியே 7 லட்சத்து 93 ஆயிரத்து 295 மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.2 கோடியே 53 லட்சத்து 66 ஆயிரத்து 593 ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

ஈரோடு: ஏப்.15 இல் தபால் வாக்குப்பதிவு

image

மக்களவை தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸார், ஆயுதப்படை போலீஸார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீஸாருக்கு வருகின்ற 15ஆம் தேதி தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது

News April 12, 2024

ஆசனூர்: வாகனத்தை வழிமறித்த யானை

image

 ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் அலைந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கூட்டம் உணவு தேடி சாலையில் உலா வந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News April 12, 2024

சமத்துவ நாள் உறுதிமொழி

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் முகமது உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News April 12, 2024

பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுமித்ரா உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் இன்று திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அந்தியூர் தொகுதி, கடுக்காம்பாளையம் கிராமத்தில் உள்ள கடைகள் விவசாய நிலங்களில் வேலை செய்யக்கூடிய விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வரும் 19ஆம் தேதி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கினர்.