Erode

News October 31, 2024

“நம்ம ஈரோடு” செல்பி பாயிண்ட் அமைப்பு

image

ஈரோட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான நம்ம ஈரோடு செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி முன்புறம், பெரிய மாரியம்மன் கோவிலுக்கு எதிரே “நம்ம ஈரோடு” என்ற செல்பி பாயிண்ட் தற்போது புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மக்கள் மற்றும் ஈரோடு வரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்.

News October 31, 2024

ஈரோடு: முன்னாள் அமைச்சர் தீபாவளி வாழ்த்து

image

தமிழக முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தத் தீப ஒளி திருநாளில், இருள் நீங்கி, இன்பங்கள் பெருகி, உள்ளங்கள் மகிழட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News October 31, 2024

தீபாவளி வாழ்த்து தெரிவித்த எம்.எல்.ஏ.

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மூத்த அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டம் – மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி, எங்கும் ஒளி பரவட்டும், இன்பம் பெருகட்டும் என மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

News October 31, 2024

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தீபாவளி வாழ்த்து

image

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக, அன்பு எங்கும் நிறையட்டும் மனதில் மகிழ்ச்சி பெருகட்டும் என அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் மற்றும் தீ விபத்தை தடுக்க தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

ஈரோடு மக்களே இதை மட்டும் செய்யாதீங்க

image

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு மக்கள் தீபாவளியன்று தவிர்க்க வேண்டிய செயல்களை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். அதன்படி, பட்டாசுகளை கையில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

News October 31, 2024

தீபாவளி: மக்களே கவனமா கொண்டாடுங்க!

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட ஈரோடு மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!

News October 30, 2024

பவானிசாகர் அணை நீர்மட்ட நிலவரம்

image

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,863 கன அடியாக வருகிறது. அணையின் நீர் மட்டம் 91.35 அடி, நீர் இருப்பு 22.47 டி.எம்.சி., அணையிலிருந்து வினாடிக்கு 2,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News October 30, 2024

ஈரோடு பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஈரோட்டில் தங்கி பணிபுரியும் வெளியூர் தொழிலாளர்கள் இன்று காலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் ஈரோடு பஸ் நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் இருந்தது. மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

News October 30, 2024

ஈரோடு: ஜவுளி வாங்க படை எடுக்கும் பொது மக்கள்

image

ஈரோடு தீபவாளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் ஜவுளி,பட்டாசு, வீட்டு உபயோகப்பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ஜவுளிக்கடையில் கடந்த ஒரு வாரமாக விற்பனை களைகட்டி உள்ளது.ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்துக்கும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் என்பதால் சூரம்பட்டி நால்ரோடு வழியாக வாகன ஓட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

error: Content is protected !!