India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு பெரிய வலசு – கொங்குநகர் பகுதியில் பொன்னுசாமி (60) என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த தறிப்பட்டறை தொழிலாளர்கள், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். பின் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
ஈரோட்டில் நேற்று (ஏப்.26) 107.6 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் பயிற்சி சேர்க்கை முன்பதிவு வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 7338720704, 9698342166 என்ற எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகிரி பேரூராட்சி வார சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடைகளில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் தங்களின் வியாபாரத்திற்கு தகுந்தவாறு இடம் ஒதுக்கப்படவில்லை என வியாபாரிகள் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதியிடம் கோரிக்கை வைத்தார். இன்று அவர் சந்தை பகுதிக்கு சென்று பார்வையிட்டு வியாபாரிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் காணாமல் போய் விட்டதாக கூறி புகார் கொடுத்து இருந்தனர். உடனடியாக சைபர்கிரைம் போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூ.11,10,544 மதிப்பிலான 72 செல்போன்கள், கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதன் உரிமையாளர்களிடம், ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜவகர் இன்று வழங்கினார்.
ஈரோடு வஉசி விளையாட்டு மைதான வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நீச்சல் குளம் உள்ளது. நடப்பாண்டில் 3ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் மற்றும் மேலும் தகவலுக்கு 0424-2223157 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று (ஏப்.25) 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
தாளவாடி அடுத்த கும்டாபுரம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண் யானை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து யானையின் உடல் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் தந்தங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனால் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டதா?அல்லது வேறு காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம், வ.உ.சி பூங்கா மைதானத்தில் வருகிற 29ம் தேதி தொடங்கி, மே 13 வரை, 15 நாட்கள் நடக்கிறது. சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு, தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஜிம்னாஸ்டிக் உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ரூ.200 சந்தா செலுத்த வேண்டும்.
ஈரோடு, திண்டல் மலையில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி, ராஜகோபுரம் அமைக்கும் பணியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மதிப்பு ரூ.2.11 கோடி ஆகும். இந்நிலையில், 5 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.