India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோசடி செய்பவர்கள் தங்கள் பெயருக்கு வந்த, ஒரு கூரியர் பார்சலில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறி மக்களை அழைத்து ஏமாற்றுகிறார்கள். எனவே தங்கள் மீது வழக்கு சிக்கலை தவிர்க்க பணம் செலுத்துமாறு போலி போலீஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வரலாம். அத்தகைய மோசடி செய்பவர்களுக்கு ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம் என ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு அடுத்த செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு (ஜேசீஸ்) இன்று காலை பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. எனவே வெடிகுண்டு மிரட்டலால் பள்ளிக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டது.பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, ஈரோடு மாவட்ட போலீசார் பள்ளியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதேபோல் செப்டம்பர் மாதம் இதே பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில், சம்பா (ரபி) பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், 1 ஏக்கருக்கு ரூ.573 செலுத்தி எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பயன்பெறலாம். எனவே விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், நவம்பர் 15க்குள் பயிர் காப்பீட்டு செய்யலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில் அமைச்சர் சு.முத்துச்சாமி, அந்தியூர் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து ஆடுகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், ஆடுகள் வளர்ப்போர் (சினை ஆடு மற்றும் 4 மாதத்திற்கு கீழ் உள்ளவை தவிர) கால்நடை மருத்துவ நிலையங்களில் இத்தடுப்பூசியை இலவசமாக ஆடுகளுக்கு செலுத்தி கொள்ளலாம் கலெக்டர் என ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ரவி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது விவசாய நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்தல் என பல்வேறு கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளனர்.
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில், 68 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. அக் குழந்தைகளின் எடை 940 கிராம், 680 கிராம் மட்டுமே இருந்தது. அரசு மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் தற்பொழுது 1.700 கிராம், 1கிலோ முன்னேற்றம் கண்டு இன்று நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இச்சாதனையை படைத்த ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நவம்பர் 15ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது86754-12356, 94990-55942 என்ற எண்கள் அல்லது erodemegajobfair@gmail.com மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை மற்றும் பல்வேறு அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்று கொண்டார். தொடர்ந்து நலவாரியத்தில் பதிவு பெற்ற தூய்மை பணியாளர் வாரிசு தாரர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்.
ஆப்பக்கூடல் அருகே அத்தாணி பகுதியில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிள் பயணம் செய்த தாய், மகள் அதே இடத்தில் இன்று உயிரிழந்தனர். அவர்களை ஆப்பக்கூடல் போலீசார் மீட்டு உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.