India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில், 4,700 பேர் தேர்வெழுத உள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 236 பேர் மற்றும் அரசு மாதிரி பள்ளியில் (எலைட்) பிரத்தியேகமாக நீட் தேர்வுக்கு பயின்ற 74 பேர் என மொத்தம் 310 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
ஈரோடு, எஸ்.எஸ்.பி நகர் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பவானி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த கவிதா (30) என்பவரும் வேலை செய்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் கவிதா வேலை செய்தபோது, அவரது சேலை கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவருக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் மூலம் ராஜேஷ்குமார் (36) என்ற நபர் அறிமுகமானார். சென்னை தலைமைச் செயலகத்தில்
மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி, அங்கமுத்துவிடம் ரூ.16.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானார். அங்கமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. இதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து கட்டணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9487247205, 0424-2294365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தோடு அடுத்த நரிப்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்று 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நரிப்பள்ளம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் மே 12ஆம் தேதி அக்னி நட்சத்திர மஹா அபிஷேக விழா நடைபெற உள்ளது. முன்னதாக 11ஆம் தேதி சென்னிமலை மாரியம்மன் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் குடம் புறப்படுகிறது. பின்னர் மே 12 ஆம் தேதி அக்னி நட்சத்திர விழா நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மனைவி ரஞ்சிதா,மகன் அபிஷேக், மகள் நித்திஷா ஆகியோருடன் கரூர் சென்று விட்டு நேற்று இரவு மீண்டும் சிறுமுகை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சத்தியமங்கலம் அடுத்த நெசவாளர் காலனி அருகே வந்த போது சத்தியமங்கலம் நோக்கி வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் முருகன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அந்தியூர் வட்டம், மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவர் சரவணன் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2,500 மரங்களை நட்டு கிராமம் முழுவதும் பராமரித்து வருகிறார். கடுமையான கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் , பசுமையாகவும் காட்சியளிக்கிறது. மைக்கேல்பாளையம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் ஊராட்சி தலைவரை வெகுவாக பாராட்டினர்.
ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.