Erode

News May 3, 2024

ஈரோடு: கோவில் கடைகளில் ரூ.4.70 கோடி வாடகை பாக்கி

image

ஈரோடு நகர் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 46 கடைகள் உள்ளன. இதில் 39 கடை ஒப்பந்ததாரர்கள் ரூ.4 கோடியே 70 லட்சம் வாடகை செலுத்தாமல், பாக்கி வைத்துள்ளனர். எனவே கடந்த 3 மாதமாக வாடகை நிலுவை தொகை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 3, 2024

ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு!

image

ஈரோட்டில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டில் உட்சபட்ட வெப்ப அலையின் தாக்கம் இருந்து வந்த நிலையில் இச்செய்தியைத் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

90 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

image

சென்னிமலை பகுதியில் உள்ள பழக்கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ப.நீலமேகம், சென்னிமலை பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 90 கிலோ மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு மாதிரி எடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

News May 3, 2024

மின் உற்பத்தி நிறுத்தம்

image

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த கோனேரிப்பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை நீர் தேக்க மின் நிலையம் உள்ளது. இந்த கதவணையில் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் அணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதன்காரணமாக நீர் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதானல் காவிரி ஆறு தண்ணீரின்றி பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

News May 3, 2024

ஆதிரெட்டியூர் மாரியம்மன் கோவில் திருவிழா

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் ஆதி ரெட்டியூர் ஸ்ரீ மாரியம்மன் லோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக பூஜை, மாவிளக்கு, திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு கொங்கு நாட்டின் பெருமைக்குரிய வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

ஈரோடு: ஒரே நாளில் 81 நிறுவனங்கள் மீது வழக்கு

image

ஈரோடு மாவட்டத்தில், மே.1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News May 2, 2024

ஒரே நாளில் 81 நிறுவனங்கள் மீது வழக்கு

image

ஈரோடு மாவட்டத்தில், மே 1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News May 2, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படிஈரோட்டிற்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 2, 2024

ஹிட்லரின் வழியை பயன்படுத்தும் பிரதம் மோடி – முத்தரசன்

image

ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்
முதற்கட்ட தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது. தோல்வி பயத்தால் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பிரதமர் பேசியிருக்கிறார். ஹிட்லரின் வழியை மோடி பின்பற்றுகிறார். மேலும் பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல என தெரிவித்தார்.

News May 2, 2024

அணையில் குளிக்க சென்றவர் பலி

image

சத்தியமங்கலம் மயடிபுதூரை சேர்ந்தவர் மகேந்திரன் (31). இவர் நேற்று மதியம் நண்பர்கள் 2 பேருடன் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மகேந்திரன் ஆழமான பகுதிக்கு சென்ற போது தண்ணீரில் மூழ்கினார். பின் அருகில் இருந்தவர்கள் மற்றும் மீனவர்கள் மகேந்திரன் உடலை சடலமாக மீட்டனர். இதுபற்றி பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.