India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மல்லிக்கை சேர்ந்தவர் சுப்பிரமணி ( 55). கூலித்தொழிலாளி. இவர் ஈரோடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர (நவம்பர்) வேளாண் குறைதீர் கூட்டம் வரும் நாளை (நவம்பர் 29) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார். இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புநர் மற்றும் ஓட்டுநர் பணியிடத்துக்கு வரும் நவ.30ம் தேதி காலை 11:30 மணி முதல் 2 மணி வரை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், டிபி ஹாலில் நேர்முகத் தேர்வு நடக்கிறது. அவசர கால மருத்துவ நுட்புநர் பணிக்கு அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்).
ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பாதை வழியாக, கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய, பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று மதியம் கோழி பாரம் ஏற்றி வந்த வாகனம், பர்கூர் மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான கைப்பை, சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி வகுப்பு வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை முறையாக மாநகராட்சியில் வருகிற டிசம்பர் 31க்குள் பதிவு செய்து உரிமம் பெறாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எவ்வித தொற்றுநோய் ஏற்படாமல் கவனமாக கண்காணித்து வர வேண்டும். ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால், மாநகர நல அலுவலருக்கு விபரம் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்மா பேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் துரையின் (36) கூலி தொழிலாளி, இவர் நேற்று பவானி ரோடு பழைய காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் துரை பலத்த காயம் அடைந்தார். அவரை பவானி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மொடக்குறிச்சி அடுத்த அண்ணாமலை கோட்டையைச் சார்ந்த விவசாயி நாச்சிமுத்து வயது 58, வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆடுகளை பட்டியில் அடை த்து விட்டு சென்றுவிட்டார். நேற்று வந்து பார்த்த போது மர்ம விலங்கு ஏதோ 11 ஆடுகளையும் அடித்து கொன்று விட்டது. இதனை அடுத்து ஈரோடு வனக்காப்பாளர் ஜெயசூர்யா விரைந்து வந்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலையில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மலை பகுதியில் சீரமைக்கும் பணிநடைபெறுவதால் நேற்று முதல் கோவில் பேருந்து செல்வது நிறுத்தி வைக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே வருகிற 27.11.2024 புதன்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும்வரை பக்தர்கள் படிவழியை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.