India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக ஈரோடு மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாள் மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் (30.11.2024) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் நவம்பர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இந்நிகழ்வில், அனைத்துத்துறை அலுவலர்கள் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்று கொண்டு, விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- (மில்லி மீட்டரில்) ஈரோடு 9, மொடக்குறிச்சி 12, பெருந்துறை 20, சென்னிமலை 27, பவானி 14, கவுந்தப்பாடி 7.6, அம்மாபேட்டை 10.2, வரட்டுப்பள்ளம் அணை 18, கோபிசெட்டிபாளையம் 16.2, எலந்தகுட்டைமேடு 17.6, கொடிவேரி அணை 14, குண்டேரிப்பள்ளம் அணை 6, நம்பியூர் 9, சத்தியமங்கலம் 11, பவானிசாகர் அணை 17.2 மற்றும் தாளவாடி 6.4.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி படை வீரர் கொடி நாளை முன்னிட்டு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு தேநீர் விருந்து அளிக்க உள்ளார். பின்னர், நடைபெறும் சிறப்பு குறைதீர் கூட்டத்தில்,முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள், படையில் பணிபுரிவோரை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று(2.12.24) கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோபி அருகே நேற்று நடைபெற்ற கொலையில் மோகன்லால் என்ற நபர் விவசாயி கண்ணன் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக சுட்ட என்ற கேள்விக்கு இதற்கான காரணத்தை போலீஸிடம் நேற்று வாக்குமூலம் அளித்தார். அதில் இரவில் என் வீட்டு அருகே அருவாளுடன் நின்று கொண்டிருந்ததால், என்னை தாக்க வருகிறார் என நினைத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஃபெங்கல் புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வகையில், ஈரோடு மாவட்டத்திலும் 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் ஈரோடு-5.90 மி.மீ., பவானிசாகர்-1 மி.மீ., மொடக்குறிச்சி-1 மி.மீ., பெருந்துறை-4 மி.மீ., சென்னிமலை-4 மி.மீ., கொடிவேரி அணை-1.20 மி.மீ., குண்டேரிபள்ளம் அணை-1.60 மி.மீ., சத்தி-2 மி.மீ. மழை பதிவானது.
ஈரோட்டில் கள் இறக்குவோம் – நல்லசாமி அறிவிப்பு ➤ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை ➤ ஈரோடு மாவட்டத்தில் 16,164 டன் உரம் இருப்பு ➤ மலை தேனீக்கள் கொட்டி தொழிலாளர் பலி ➤ மதுபானக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு ➤ துப்பாக்கியால் சுட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த நபர் ➤ சென்னிமலை: சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம் ➤ டிஜிட்டல் மோசடி: ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ்அப்பில் மக்களுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற கோப்புகளை பதிவிறக்குவதன் மூலம், உங்கள் மொபைலில் மால்வேர் வைரஸை பரப்பி, சைபர் குற்றவாளிகள் உங்களின் அனைத்து தகவல்களையும் திருடுகின்றனர். தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் அழைப்பிதழ் வந்தால், அதை கிளிக் செய்ய வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் சைபர் கிரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.