Dindigul

News December 23, 2024

திண்டுக்கல் காவல்துறையின் ரோந்து விவரம்

image

இன்று இரவு திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் ரோந்து விவரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊடகம், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் ரோந்து வருகின்றனர். அப்பகுதியில் ஏதேனும் புகார் இருப்பின் மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 23, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ATM மையத்திற்கு செல்லும் போது முன்பின் தெரியாத நபர்களிடம் ATM கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம். அவர்கள் உங்களை ஏமாற்றி பணம் எடுக்க வாய்ப்புள்ளது) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 23, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.அமித்ஷாவை இழிவுபடுத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது புகார்
2.ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி
3.அய்யலூர் அருகே வேட்டையாட முயன்ற 7 பேர் கைது
4.குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 284 மனுக்கள்
5.திண்டுக்கல்லில் விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம்

News December 23, 2024

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 284 மனுக்கள் 

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 284 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News December 23, 2024

திண்டுக்கல்லில் விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம்

image

திண்டுக்கல்: சந்தைப்படுத்துதல் சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், வேளாண் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கோரியும், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக இன்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக, விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் உடனடியாக எரிக்கப்பட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

News December 23, 2024

அய்யலூர் அருகே வேட்டையாட முயன்ற 7 பேர் கைது

image

திண்டுக்கல் வனபாதுகாப்புபடை உதவி வன பாதுகாவலர் தலைமையிலான வனத்துறையினர் வடமதுரையை அடுத்த அய்யலூர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வனப்பகுதிக்குள், தலையில் அணியும் விளக்கு உள்ளிட்ட உபகரணங்களுடன் வேட்டையாட முற்பட்ட அய்யலூர் பகுதியை சேர்ந்த 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

News December 23, 2024

திண்டுக்கல்லில் இன்று மின்தடை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, ரெட்டியபட்டி, மோர்பட்டி, நாகங்கலம், சத்திரப்பட்டி, குஜிலியம்பாறை, செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 22, 2024

திண்டுக்கல்லில் இன்று இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 22.12.2024-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், கொடைக்கானல் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம்,பழனி,நிலக்கோட்டை, குஜிலியம்பாறை, ஆத்தூர்,நத்தம், உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு.

News December 22, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.பழனியில் லாட்டரி விற்பனை 7 பேர் அதிரடி கைது!
2.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
3.தொடர் விடுமுறையால் ரயில் சேவை மாற்றங்கள் ரத்து
4.ராமராஜபுரம் வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
5.திண்டுக்கல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

News December 22, 2024

பைக் மீது கார் மோதி விபத்து, கணவன் – மனைவி பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோமானாம்பட்டி விலக்கு பகுதியில் பைக் மீது கார் மோதி விபத்து இன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவர் ராஜேந்திரன், மனைவி சுமதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!