India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், பழனிரோடு அவதார் செராமிக்ஸ் அருகே ஒரு இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி அவர்கள் தலைமையில் நேற்று (24.12.2024) நடைபெற்றது. அருகில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர்(கூ.பொ.) ச.சுகுணா மற்றும் பலர் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடுவது வழக்கம். அதுபோல் இன்று (25.12.24) (அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்) என்ற வாசகம் பொருந்திய வாழ்த்தும் புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் – திருச்சி ரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் அப்பகுதியில் செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 27, 28, 30 மற்றும் 31, ஆகிய நாட்களில் புறப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து வருகின்றனர் தங்களது பகுதியில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
1.திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
2.பழனியில் அதிமுக நிர்வாகிகள் மோதல்
3.ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் கருவிகளை வழங்கிய ஆட்சியர்
4.திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
5.கொடை: உறைபனி வெள்ளை நிற போர்வை காட்சி
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ( வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடிகளை கவனித்து வாகனம் ஓட்டுவோம். விபத்துக்களை தவிர்ப்போம்.. ) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 96558-64426 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் பேசுகையில், திண்டுக்கல்லில் விரைவில் ரூ. 292 கோடியில் மத்திய அரசின் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமையவுள்ளது. இதேபோல, திண்டுக்கல்லிருந்து சபரிமலைக்கு புதிய ரயில் பாதையும், திண்டுக்கல்- காரைக்குடி இடையே ரயில் பாதையும் அமையும். இதற்கான அனைத்துப் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றாா்.
ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். கொடைக்கானலில் இன்று 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், உறைபனி பொழிவதால் புல்வெளிகள் வெள்ளை நிற போர்வை போர்த்தியது போல் காணப்படுகின்றன. பச்சைப் புற்களின் மீது வெள்ளை போர்வை போர்த்தப்பட்டுள்ளது. கடுங்குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.