India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி அடிவாரம் சன்னதி வீதியில் பஷிராபேகம் (45) என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணை கொலை செய்த மாரிமுத்து என்பவர் தன்னை தானே கழுத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சன்னதி வீதியில் அதிகாலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்றைய (டிச.26) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஸ்சி (தொகுதி 2 மற்றும் 2ஏ) முதன்மை தேர்வுக்கு நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் நாள்தோறும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று ( Don’t share your Wi-Fi Password, உங்களது Wi-Fi Pasword-யை மற்றவர்களுக்கு தெரிவித்தால், உங்கள் செல்போன் மற்றவர்கள் மூலம் ஹேக் செய்யப்படலாம்) என்ற விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பழனி – அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு பள்ளி – 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை சென்னை – தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அம்பிளிக்கையிலுள்ள மகளிர் கல்லூரியில் உணவு & உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பழனி முருகன் கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதே போல் மதுரை கள்ளழகர் கோயில், மருதமலை கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கீழ் செயல்பட்டு வரும் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இரண்டு பள்ளிகள் என 6கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஏற்கனவே காலைஉணவுத்திட்டம் செயல்பட்டுவரும்நிலையில் மதிய உணவுத்திட்டத்தில் 5,000 மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைவார்கள்என தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் இறந்த நிலையில், மேலும் இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த NGO-காலனியை சேர்ந்த ராஜசேகர் மனைவி பாலபவித்ரா(29) என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரிகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் உதவியாளர் (ம) டெக்னீசியன்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களுக்கு நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பங்களை <
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்றைய (டிச.25) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.