Dindigul

News December 28, 2024

முருங்கைக்காய் ஆலையில் நடிகர் பாக்கியராஜ்

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கேதையுறும்பில் முருங்கைக்காய் ஆலையில் நடிகர் இயக்குனர் பாக்யராஜ் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனையாளர்களுக்கு முருங்கை மூலிகை பொடிகளை விற்பனையை தொடங்கி வைத்தார். இவ் விற்பனையில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் மதுரை கோவை கடல் கடந்து இலங்கை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மூலிகை பொடியை பெறுவதற்கு விற்பனையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

News December 28, 2024

காவல்துறை சார்பாக விழிப்புணர்வு புகைப்படம் வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (‘இணையத்தில் பல போலியான வேலை வாய்ப்பு தளங்கள் உள்ளது எச்சரிக்கை’) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

News December 28, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட அளவில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி (05.01.2025) அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்-624 004 என்ற முகவரியில் நேரிலோ அல்லது கைப்பேசி எண் 7401703504 வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவிப்பு.

News December 28, 2024

சரக்கு வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு லேசான காயம்

image

கொடைக்கானல், மேல்மலை கிராமமான பூம்பாறை மலை உச்சியில் உள்ள டவர்ஸ் வேலி என்ற பகுதிக்கு சரக்கு வேனில் 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றுக் கொண்டு மலைப் பாதையில் சென்ற பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.

News December 28, 2024

சிக்கன் பிரைடு ரைசில் புழு

image

ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பேக்கரியில் கல்லூரி மாணவர்கள் சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட சென்றனர். இவர்களுக்கு வழங்கிய சிக்கன் பிரைடு ரைசில் புழுக்கள் இருப்பதாக புகார் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் அந்த பேக்கரியில் சோதனை நடத்தினர். அப்போது சிக்கனில் அதிகமாக கலர் ரசாயனப்பொடி இருந்ததாக கூறி 5 kg சிக்கனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

News December 28, 2024

பழநி கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

image

பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. அதில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரூ. 3 கோடியே 5 லட்சத்து அறுபத்து ஆறாயிரத்து 475, வெளிநாட்டு கரன்சி 863, 861 கிராம் தங்கம், 13.822 கிராம் வெள்ளி கிடைத்தது. உண்டியல் என்னும் பணியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

News December 27, 2024

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்றைய (டிச.27) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 27, 2024

திண்டுக்கல்லில் பெண் பரபரப்பு புகார் 

image

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று  கும்பகோணத்தை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தனிமையில் இருந்தும், பல லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டும் ஏமாற்றியதாக புகார் அளித்தார். அந்த புகாரில், திண்டுக்கல் மாவட்ட நல்லாம்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 27, 2024

அதிமுக – தவெக கூட்டணியா: திண்டுக்கல் சீனிவாசன் 

image

திண்டுக்கல் நடந்த நிகழ்ச்சியில் சீனிவாசன் பேசுகையில், அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பொதுச்செயலாளர் அறிவிப்பார். தவெக தலைவர் விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்வது, அவரது ஸ்டைலாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல், அவரது ஸ்டைலில் அரசியல் செய்கிறார். அதனை விமர்சிக்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாடல். தவெக உடன் கூட்டணி அமையுமா என்பது எந்த ஜோசியமும் சொல்ல முடியாது என்றார். 

News December 27, 2024

கடாமான் கொம்பு விற்க முயன்ற 4 பேர் கைது

image

வன பாதுகாப்பு படையினர், கன்னிவாடி வனத்துறையினர் இணைந்து தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, கட்டசின்னாம்பட்டி கிராமம் கோட்டைப்பட்டி செல்லும் சாலையில், தண்டபாணி என்பவர் வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கடாமான் கொம்புகளை பறிமுதல் செய்தனர். பின்னர் உமாசங்கர், சுதன்குமார், ராமக்கண்ணன், தண்டபாணி ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!