India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வந்திதா பாண்டே ஐபிஎஸ் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், இதை சிறப்பிக்கும் விதமாக வருகிற 30 முதல் ஜனவரி 1ம் தேதி வரை 3 நாட்கள், தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில், மாதிரி திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு இன்று சுற்றுலா பயணிகள் சிலர் வேன் மூலம் வந்துள்ளனர். அவர்கள் கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு, பழனி சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சவரிக்காடு என்னும் பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று (29-12-2024) இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (‘முன்னால் செல்லும் வாகனத்திற்கு 10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம் விபத்தை தடுப்போம்’) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளதால் இந்த வருடம் மாசி பெரு திருவிழா நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜன.,26ஆம் தேதி அன்று பாலாலயம் நடைபெற உள்ளது. எனவே கோட்டை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் மரத்தினால் செய்யப்பட்ட அம்மன் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் நடனமாடி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல், நல்லாம்பட்டியைச் சேர்ந்த பகவதி என்பவரது மகன் நவநீதகிருஷ்ணன் என்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்த சிவதுர்கா என்பவரை, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக சிவதுர்கா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு நவநீதகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் அரசு காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி செய்திகுறிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று 28-12-2024 இரவு 11.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.