Dindigul

News January 1, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று (31-12-2024) இரவு 11.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News January 1, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்றைய (டிச.31) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல்,வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 31, 2024

போதைப்பொருளுடன் 1 பெண் உட்பட 4 பேர் கைது

image

கொடைக்கானலில் போலீசாரின் வாகன சோதனையின் போது, புத்தாண்டை கொண்டாட வந்த, கேரளா பதிவு எண் கொண்ட காரில் பயணித்த ஐ.டி.ஊழியர்களிடமிருந்து மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டது. இதையடுத்து கேரளாவை சேர்ந்த ரஞ்சிஸ் (27), நசீர்(24), ஜிஸ்ணு(22), அஸ்ஸாமை சேர்ந்த பிரதிக்க்ஷா (25) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேரும் பெங்களூரில் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 31, 2024

வடமதுரையில் போக்சோவில் ஒருவர் கைது

image

வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த ரெங்கசாமி (43) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் இன்று நீதிபதி, ரெங்கசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News December 31, 2024

பழனியில் காணிக்கை ரூ.4.67 கோடி

image

பழனி முருகன் கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடக்கிறது. இந்த மாத டிச.26, 30 இரு நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.4 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரத்து 356, வெளிநாட்டு கரன்சி 1,069, தங்கம் 1.012 கிலோ, வெள்ளி 17.062 கிலோ கிடைத்தது என பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 31, 2024

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (30.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் நகர் பகுதிகளில் இன்று தமிழ்நாடு மாணவர் மன்றம், மாணவியர் பிரிவு சார்பாக அண்ணாமலை சாட்டையில் அடித்துக் கொள்வது போன்றும், எடப்பாடி பழனிச்சாமி devil உருவத்தில் உள்ளது போன்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும்  “பொள்ளாச்சி புகழ் கள்ளக் கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பு நிறுத்த பாக்குது” என்ற வாசகங்களும் இடம் பெற்று இருந்தன.

News December 30, 2024

புதுமை பெண் திட்டம் தொடக்க நிகழ்ச்சி

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நடைபெற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டவிரிவாக்கம் தொடக்க விழா CM மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சக்கரபாணி, செந்தில்குமார் M.P கலந்து கொண்டனர்.

News December 30, 2024

யார் இந்த வந்திதா பாண்டே? 

image

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் வந்திதா பாண்டே. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. 2013இல் சிவகாசியில் ஏ.எஸ்.பியாக பணியில் சேர்ந்த அவர் 2014இல் சிவகங்கை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கரூர் எஸ்.பியாக மாற்றப்பட்ட நிலையில், 2016 சட்டசபை தேர்தலின்போது, அரவக்குறிச்சி அருகே கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை மடக்கி பிடித்தார்.

News December 30, 2024

திண்டுக்கல்லில் அதிமுகவினர் கைது

image

திண்டுக்கல்லில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!