Dindigul

News January 7, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (07.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

சின்னாளப்பட்டி பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர் 

image

திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. அந்த போஸ்டரில் சின்னாளபட்டி குப்பையில் கிடந்த சிசுவின் சடலத்தை ரகசியமாக புதைத்த சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னாளப்பட்டி முழுவதும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 7, 2025

பழநியில் கூடுதல் கைபேசி வைப்பு மையம் திறப்பு

image

பழநியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தின் தேவையை சமாளிக்கும் பொருட்டு,வடக்கு கிரிவீதியில் குடமுழுக்கு நினைவு அரங்கு எதிரில், கூடுதலாக புதிய கைபேசி வைப்பு மையம் இன்று காலை 11.30 மணியளவில் கோவில் நிர்வாக அதிகாரியால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு ரூ.5 கட்டணத்தில் பக்தர்கள் தங்களது கைபேசியை வைத்து கொள்ளலாம்.

News January 7, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுரை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அதிவேகம் ஆபத்தில் முடியும் மித வேகம் மிக நன்று) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர், சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News January 7, 2025

முருகனை வழிபட்ட நடிகர் சிவகார்த்திகேயன்

image

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வருகை தருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருடன் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் என பலரும் ‘செல்பி’ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

News January 6, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (06.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

பழனியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தடை

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி, சார்ஆட்சியர் அலுவலகத்தில் சார்ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகர் முழுவதும் 500ML தண்ணீர் பாட்டில், ரூ.10 குளிர்பான பாட்டில் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நெகிழி இல்லா பழனி மாநகரை உருவாக்க வேண்டும் என்று சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

News January 6, 2025

திண்டுக்கல்லில் விபத்து: இளைஞர் பலி

image

திண்டுக்கல்,திருச்சி ரோடு, முள்ளிப்பாடியை அடுத்த செட்டியபட்டி பிரிவு அருகே நான்கு வழிச் சாலையில் கடந்த 3ம் தேதி இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆரோக்கியசாமி (82) பலியானார். இதில்  படுகாயம் அடைந்த சீனிவாசன்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். 

News January 6, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 213 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

News January 6, 2025

அக்னிவீர் வாயு தேர்வு: ஆட்சேர்ப்பு முகாம் அறிவிப்பு

image

இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்விற்கான ஆட்சேர்ப்புப் பேரணி (ஆட்சேர்ப்பு முகாம்) (மருத்துவ உதவியாளர் பிரிவு) 28.01.2025 முதல் 06.02.2025 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான பதிவினை இணைய வழியாக 07.01.2025 முதல் 27.01.2025 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு https://airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!