India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒட்டன்சத்திரம் தொகுதி உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில், வளமும் நலமும் பொங்கிட, அன்பும் பண்பும் பெருகிட, கரும்பாய் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திட, தமிழர் திருநாளாம் அனைவருக்கும் “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என இன்று பதிவிட்டுள்ளார்.
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை(14.1.25) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (13.1.25) திங்கட்கிழமை வந்து குவிந்தனர். திரளானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல், கொடைக்கானல் நகர் பகுதிகளான சீனிவாசபுரம், தேன்பண்ணை பகுதியில் கடந்த இரு நாள்களாக சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று கால் தடயத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் செய்தனர். சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் நேற்று அனைத்து விவசாய சங்கம் சார்பாக மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென்னை விவசாய சங்கம், பூ விவசாய சங்கம், தமிழ்நாடு கண்மாய், ஏரி, நீரினை பயன்படுத்துவோர் மாநில சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநில மாநாட்டில், நாடாளுமன்ற எம்பி சச்சிதானந்தம் கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். மேலும் விதவை, முதியோருக்கு வேட்டி,சேலை வழங்கினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம். திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், கொடைக்கானல், வேடசந்தூர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், ஆகிய பகுதிகளின் காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளன ஏதேனும் புகார் இருப்பின் தெரியப்படுத்தவும்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (வாகனம் ஓட்டும் போது மது அருந்துவதையும், செல்போன் பயன்படுத்துவதையும் மற்றும் அதிவேகத்தில் செல்வதையும் தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று (12.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல் வேலு மஹாலில் இன்று நடைபெறுகிறது. ➢ அமைச்சர் பெரியசாமி பிறந்தநாள் முன்னிட்டு 12 ஆம் ஆண்டாக இன்று அய்யம்பாளையத்தில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் போட்டி ➢ அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தொடந்து வரும் 6 நாள்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட திண்டுக்கல் மக்களே எங்கு சுற்றுலா செல்ல பிளான் போட்டு இருக்கீங்க. திண்டுக்கல்லில் சிறுமலை என்ற ஒரு இடம் உள்ளது. இது மினி கொடைக்கானல் என அழைக்கப்படும். இம்மலையை அடை 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இங்கு வாழைப்பழம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பொங்கல் விடுமுறையை நீங்க எங்க கொண்டாட போறீங்க கீழே கமெண்ட் பண்ணுங்க.
திண்டுக்கல்லில் இன்று 11-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
திண்டுக்கல் சிறுமலை செட்டில் திண்டுக்கல் சுற்றுவட்டார கிராம பகுதியான ஆத்தூர் மல்லையாபுரம் மயிலாப்பூர் நத்தம் சுரக்காய்பட்டி தர்மத்துப்பட்டி கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு கொண்டுவரப்படும் இந்நிலையில் பொங்கல் மற்றும் சுப முகூர்த்தம் வருவதை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது அதன் படி செவ்வாழை ரூ.1500 க்கும் கற்பூரவள்ளி ரூ.1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.