India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிலக்கோட்டை அருகே பெண் விஷம் குடித்தும், இவருடன் தகாத உறவில் இருந்த இளைஞர் கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டனா். இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு தோட்டத்துக்குள் சென்றதாகவும், அங்கு ஆலீஸ் விஷம் குடித்தும், ஜெபஸ்டீன் ஜீவா கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனா். இதுகுறித்து, நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை அதிகாரியின் ரோந்து விவரம். திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
நாளுக்கு நாள், ஆன்லைனில் மோசடிகள் அதிகம் அரங்கேறிவருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கபட்டு வருவதுடன், தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில், இன்று (அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 930 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 8 சுற்றுகளில் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான 32 பேர் இறுதிச்சுற்றில் களமிறங்கினர். இந்நிலையில், 14 காளைகளை அடக்கி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஜன14 தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, அதேபோல் திண்டுக்கல் மாவட்டம்,பழனி நெய்க்காரப்பட்டி ஸ்ரீ ரேணுகா தேவி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளியில் இன்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, மேலும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான விவரங்களை திண்டுக்கல் மாவட்ட இணையதள முகவரி https://dindigul.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அண்ணா நகர் எம்.எஸ். ப ஸ்கூல் அருகில் அமைந்துள்ள தைலம் தோப்பில் வருகிற 18, 19 ஆகிய இரு நாட்கள் ஜெமஸ்டிக்ஸ் வாரியர்ஸ் நடத்தும் 8ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சிறப்பு பரிசும் நினைவு கோப்பையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் வாழ்த்து மடலினை, நேற்று உணவு மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.
பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது. கிலோ மல்லிகை ₹3000 முதல் ₹3,500 வரை விற்பனையானது. முல்லைப் பூ ₹1600, சம்பங்கி ₹300, ரோஜாப்பூ ₹220, ஜாதிபூ ₹1200, கனகாம்பரம் ₹1500, கோழிகொண்டை ₹80, செண்டுமல்லி ₹60, காக்கரட்டான் ₹1,300, செவ்வந்தி ₹150 முதல் 200, மரிக்கொழுந்து ₹200, மருகு ₹120, அரளிப்பூ ₹450, வாடாமல்லி ₹70, விருச்சி ₹180, பட்டன் ரோஸ் ₹350 என விற்பனையானது.
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் சண்முக நதி, இடும்பன் குளம் பகுதியில் குளித்து நீராடிய பின் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.