India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்திய வைகை இலக்கியத் திருவிழா 2025-ல் கலந்து கொண்டு திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமை உரை வழங்கினார். சந்திரகுமார் இணை இயக்குநர், பொது நூலக இயக்ககம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் முதன்மை கல்விஅலுவலர் என பலர் இருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அந்த 8 பேருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். பருவ மழை காலங்களில் உண்ணி காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேர் பாதிப்பு உள்ளாகியுள்ளது குறிப்பிடதக்கது.
திண்டுக்கல் மாவட்டதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. அதில் 7.02.2025- அன்று கொசவப்பட்டியிலும், 16.02.2025- தவசிமடையிலும்,19.02.2025-அன்று புகையிலைப்பட்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்படுகள், பாதுகாப்பு, போன்ற முக்கியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி, உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 56 லட்சம் 36 ஆயிரத்து 788ரூபாய் கிடைத்துள்ளது. 609வெளிநாட்டு கரன்சிகள், 1591கிராம் தங்கம், 20320கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்கள் இரு பிரிவினராக பிரித்து நான்கு பணி மேற்கொள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இன்று இரவு 10:00 மணி முதல் 2 மணி வரை ஒரு பிரிவினரும் 2 மணி முதல் காலை 6 மணி வரையும் மற்றொரு பிரிவினரும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை அவசர எண்ணான 100 அழைத்து தெரிவிக்கலாம்.
திண்டுக்கல், ஆத்தூர் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி, அவர்கள் இன்று (22.01.2025) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஆன்லைன் கடன் செயலிகளை (Loan App) நம்பி பணம் பெற வேண்டாம். பின்னாளில் அதிக பணம் கேட்டு உங்களை மிரட்டி பணம் பறிக்க கூடும். எச்சரிக்கை) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பக்தர்களுக்கு உணவு வழங்க முறையாக அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்கிய பிறகு இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மட்டுமின்றி, சொத்துவரி செலுத்தாத வீடுகளிலும், குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரே மாதத்தில் வரி செலுத்தாத 200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வரி பாக்கியை உடனே செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்- கோயம்புத்தூர் செல்லும் பயணிகளுக்காக புதிய ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் -06106- திண்டுக்கல் மெமு எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூரில் காலை 9:35க்கு புறப்பட்டு பழனியை 12:05க்கு வந்து சேரும், ஒட்டன்சத்திரம் 12.35க்கும், திண்டுக்கலுக்கு 1.10 க்கு வந்து சேரும், மீண்டும் திண்டுக்கல்லிலிருந்து 2.00மணிக்கு புறப்பட்டு கோயம்புத்தூரை 5.50க்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.