Dindigul

News January 24, 2025

திண்டுக்கல்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் மதுரை பேரையூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் நத்தம் அருகே உள்ள செந்துறை அரசு பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 24, 2025

பழனியில் ரூ.6 கோடியை தாண்டிய காணிக்கை

image

பழனி மலைக் கோயிலில் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், ரொக்கமாக ரூபாய் 6,39,29,559, தங்கம் 1874 கிராம், வெள்ளி 27003 கிராம், வெளிநாட்டு கரன்சி 906 நோட்டுகள் கிடைத்துள்ளன. இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News January 24, 2025

திண்டுக்கல் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

image

திண்டுக்கல் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாவட்ட தலைவர் அபுதாஹீர் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் தௌஃபீக் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் அங்குசாமி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News January 24, 2025

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமைச்சர் அர.சக்கரபாணி, “எனக்கு இன்னொரு பிறவி உண்டென்றால் தமிழனாக பிறக்க ஆசைப்படுவேன்” என்று சொன்னவரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளில் அம்மாவீரரின் தியாகத்தையும் புகழையும்,போற்றி வணங்குவோம் என தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்,

News January 24, 2025

திண்டுக்கல்: ஐ.பெரியசாமி கொடுத்த பதிலடி

image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஐ.பெரியசாமிள் மீது குற்றச்சாட்டை வைத்தார். இதற்கு நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, சிபிஐ,அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு, எல்லாம் பயந்து, மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் என அஞ்சி நடுங்கும் கோழை பழனிசாமிகள் அல்ல நாங்கள் என பதிலடி கொடுத்தார்.

News January 24, 2025

திண்டுக்கல்லில் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல்லில் இன்று (23-01-2025) இரவு 11 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது. 

News January 23, 2025

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.02.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கூடுதல் இயக்குநர் (திட்டங்கள்) ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

வாகனத்தில் பயணம் செய்யும் போது இதை பண்ணாதீங்க 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில், இன்று (வாகனத்தில் பயணம் செய்யும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News January 23, 2025

உண்ணி காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை

image

திண்டுக்கல்லில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 23, 2025

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் 

image

இந்தி திணிப்பை எதிர்த்து, உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக ஜன.25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற உள்ளது. 

error: Content is protected !!