India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாநகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அடியனூர், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, குரும்பபட்டி, முள்ளிப்பாடி ஆகிய 8 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் கலெக்டர் ஆபிசில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (செல்போன் மற்றும் கணினிக்கு வரும் தேவையற்ற குறுஞ்செய்தி அல்லது லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பழனியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசம் நடைபெற உள்ள நிலையில் தைப்பூசம் மற்றும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இன்று (27.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢ இன்று காலை 10.00 மணியளவில் இடையகோட்டையில் மரக்கன்று நடும் விழா நடைபெறுகிறது. ➢ சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு.➢ பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை 8 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி.
திண்டுக்கல்லில் நாளை (ஜன.28) பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமதுரை, புத்தூர், போஜனம்பட்டி, காணப்பாடி, கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், குஜிலியம்பாறை, ராமகிரி, தளிபட்டி, செங்குறிச்சி சார்ந்த ராஜக்காபட்டி, சிலுவத்துர், புகையிலைப்பட்டி, கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிபட்டி உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. Share it
பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சியில் எம்ஜிஆர் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதனை வரவேற்க, தொண்டர்கள் வெடி வெடித்து வரவேற்பு அளித்தனர். அப்பொழுது ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 26.01.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசின் 3வது மிக உயரிய சிவிலியன் விருதான “பத்ம பூஷன்” விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,மேலும் உழைப்பின்அடையாளமாகவும் இன்றைய இளைய தலைமுறையினரின் முன்னோடியாகவும் விளங்கும் தாங்கள் தேசத்திற்கு மேலும் பல்வேறு பெருமைகளை தேடித் தர வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அடுத்த கொடைரோடு டோல்கேட் அருகே மதுரை கோவில்பட்டி பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் காரில் தப்பி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் காரில் தப்பி சென்ற ரவுடிகளை சேசிங் செய்யும் போது ரவுடிகளின் கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு ரவுடி படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிஜம் ஏரிக்கு செல்ல மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.