India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் இன்றைய(29.1.25) நிகழ்ச்சிகள். ➢ பழனி சுவாமி கோவில் காலை 6 மணி- நடைதிறப்பு, இரவு 7 மணி- தங்கரத புறப்பாடு. ➢ஒட்டன்சத்திரத்தில் 66.24 கோடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். ➢கூட்டு போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம். ➢காலை 11.30 மணிக்கு மாநில அளவிலான சிறு தானிய உணவு திருவிழா,
தாடிக்கொம்பு கிரியம்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (67). இவர், விட்டல் நாயக்கன்பட்டி அருகே நடந்து சென்று, திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார், பிச்சை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல்லில் இன்று 28-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறுவதற்காக சென்ற கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி விளையாட்டு வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட வாய் தகராறில் ஆண் நடுவரால் தாக்கப்பட்ட விஷயம் பூதாகரமான நிலையில், தமிழக துணை முதல்வர் தலையிட்டால்,டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு பிறகு பத்திரமாக சென்னை அழைத்து வரப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற உள்ளது. எனவே, கோழி வளர்க்கும் பயனாளிகள் அனைவரும் அவர்களது கிராமத்திற்கு அரு அருகில் கால்நடை நிலையங்களில் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் வராமல் பாதுகாத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவும் உன்னிக்காய்ச்சல்பரவல் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்படுத்த சென்னை சுகாதாரத்துறையிலிருந்து 2பேர் குழு நேற்று திண்டுக்கல் வந்தனர். சாணார்பட்டி,நத்தம், தாடிக்கொம்பு பகுதிகளில் உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள், அதன் அருகிலுள்ள பகுதிகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர். உன்னிக்காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தைப்பூசத்தை முருக பக்தர்களுக்கு சேகர் பாபு பஞ்சாமிர்தம் போல் தித்திப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிப் 11, 12, 13 ஆகிய தேதிகளில் பழனி முருகன் கோயிலில் சிறப்பு கட்டணம் ரத்து செய்து அனைவரும் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், 10 நாட்களுக்கு ரயில் நிலையம், சண்முகநதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அடிவாரம் செல்ல இலவச பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டு பதிவில், “பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய செல்போன் மற்றும் கணினி மூலமாக தேவையற்ற போலியான குறுஞ்செய்திகள் மூலம் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அதில் வரும் தகவல்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல் மாநகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அடியனூர், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, குரும்பபட்டி, முள்ளிப்பாடி ஆகிய 8 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் கலெக்டர் ஆபிசில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (செல்போன் மற்றும் கணினிக்கு வரும் தேவையற்ற குறுஞ்செய்தி அல்லது லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.