Dindigul

News February 2, 2025

குற்றப்பிரிவு- சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்!

image

குற்றப்புலனாய்வுத் துறை சரகங்களுக்கு விருப்பமுள்ள சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்;ஆலோசகர் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 5 சட்ட ஆலோசகர்களை நியமிக்க குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டம். விருப்பமுள்ளவர்கள் <>www.tnpolice.gov.in<<>> தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 2, 2025

திண்டுக்கல் பெயர் எப்படி வந்தது?

image

திண்டுக்கல் என்றாலே பிரியாணி, பூட்டு தான் நியாபகம் வரும். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் திண்டுக்கல் பெயர் எப்படி வந்ததுனு?. ஊர் நடுவில் திண்டைப் போல் பெரிய மழை இருந்ததால் “திண்டுக்கல்” என பெயர் வந்ததாக கூறுகின்றனர். இதுக்கு முன் திண்டி என்ற மன்னன், இந்நகரை ஆண்ட போது மக்களை துன்புறுத்தியதால் திண்டீஸ்வரம் என வந்ததாக கூறுகின்றனர். உங்க ஊர் பெயர் எப்படி வந்தது? கமெண்ட் பண்ணுங்க

News February 2, 2025

தொலைநோக்கியில் தெளிவாக தென்பட்ட சனி கோள்

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தொலைநோக்கி கருவியின் மூலம் சனிக்கோள்களைப் பார்வையிட்டு ஆச்சரியப்பட்டனர். மேலும், இதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

News February 1, 2025

திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி

image

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யுனானி மருத்துவ பிரிவில் ஒற்றைத் தலைவலி, ஆண், பெண் ரத்த சோகை, இருதய பலவீனம், மூட்டு வலி, தும்மல், ஜலதோஷம், தோல்வியாதிகள், முதுகு வலி, கழுத்து வலி, சிறுநீரக கல் மற்றும் அனைத்து நோய்களுக்கும் யுனானி மூலிகை மருத்துவம் உள்நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு எண்: 8925579674 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News February 1, 2025

அரசு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிப்பு மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ் பிளாட் எண்4. திண்டுக்கல்-624-004 முகவரிக்கு அனுப்பவும். கடைசி நாள் 5.02.2025

News February 1, 2025

திண்டுக்கல்லில் மழை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. தமிழகத்தில் பிப்.1, 2ஆம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்ததது. உங்க ஏரியாவில் மழை பெய்தால், கமெண்ட் பண்ணுங்க.

News January 31, 2025

திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பூங்கொடி இன்று (31.01.2024) மாற்றம் செய்யப்பட்டு, வணிக வரித்துறையின் இணை ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். மேலும், சென்னை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த சரவணன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

News January 31, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த பூங்கொடி, வணிக வரித்துறையின் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சரணவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <>விண்ணப்பிக்க கிளிக்<<>>, SHARE பண்ணுங்க

News January 31, 2025

திண்டுக்கலில் இன்றைய நிகழ்வுகள்

image

திண்டுக்கல்லில் இன்று (31.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢ குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குஜிலியம்பாறைநூற்றாண்டு விழா நேரம்: காலை 10.00 மணி ➢ நாட்டு நலப்பணி திட்ட முகாம், அரசு உயர்நிலைப்பள்ளி, அ.கலையம்புத்துார், நேரம் மாலை 5 மணி. ➢ வடமதுரை, படியூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா, நேரம் மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

error: Content is protected !!