India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த கீரனூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனை பலன் அனுப்பி வைத்து மேற்படி சம்பவ குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி துவாக்குடியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், பழனி முருகன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர். அய்யலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த கிளாரா மேரி(52), இவரது மகன் சிதம்பரம் (47), இவரது மனைவி நித்தியா(32) விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிஷ்மா(18). இவர் நேற்று இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
➢ வடமதுரை, தென்னம்பட்டி ஆண்டு விழா, அரசு மேல்நிலைப்பள்ளி மாலை 4 மணி. ➢ சின்னாளபட்டி அருகே செட்டியபட்டி விருது வழங்கும் விழா, விஜய் மேலாண்மை கல்லூரி காலை 10 மணிக்கு நடக்கிறது. ➢ அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம்12:30 மணி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
கடலூர், திட்டக்குடி அருகே உள்ள கோரக்கை பகுதியைச் சேர்ந்த 8 பேர் பழனிக்கு சாமி தரிசனம் காரில் சென்றனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த பாரதி (23) என்ற இளைஞர் ஒட்டி சென்றார். தரிசனம் முடித்துவிட்டு கடலூருக்கு செல்லும் வழியில் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் அருகே கார் சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இன்று 03-02-2025 இரவு 11 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 176 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (சாலை விபத்தின் போது தலையில் காயம் ஏற்படுவதால் மட்டுமே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தலைக்கவசம் அணிவோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மார்க்கம்பட்டி மாம்பாறை முனியப்பன் கோவிலில் சாமி கும்பிடும் போது பொட்டுளி வெடி வெடிப்பது வழக்கம். இந்த நிலையில், நல்லமுத்து என்பவர் வெடி வைக்கும் போது வெடி சிதறி, அருகில் வைத்திருந்த பட்டாசு மேல்பட்டது. இதில் சாமி கும்பிட வந்து அமர்ந்திருந்த மார்க்கம்பட்டி சேர்ந்த மூர்த்தி, செல்வராஜ், முருகன் ஆகிய 3 மீதும் பட்டு காயம் ஏற்பட்டது. 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.