India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குஜிலியம்பாறை தாலுகா லந்தகோட்டை ஊராட்சி முத்தாபட்டியில் தங்கவேல் வயது 55 என்பவரை அடித்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்கள் ஸ்ரீரங்கன் கணேசன் பூமி ஆகிய மூன்று பேரை வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையிலான போலீசார் கைது செய்து குஜிலியம்பாறை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்பு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள கிரியம்பட்டி பிரிவில் எஸ் எஸ் எம் குரூப் தண்ணீர் டேங்க் டிராக்டரை குட்டத்து ஆவாரம் பட்டியை சேர்ந்த இன்னாசி வயது 55 என்பவர் ஒட்டி சென்றார். அப்பொழுது ஓசூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி காய்கறிகள் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மாதேஷ் 31 என்பவர் ஓட்டி சென்ற ஈச்சர் லாரி மோதியது. இன்னாசி காயம் அடைந்தார். விபத்து குறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள சரவணன். பவானி வட்டம், மைலம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர்மற்றும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவர். பள்ளிக் கல்வியை அரசு பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியை அரசு கல்லூரியில் படித்தார். பின்னர் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுக்காக அரசு பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றார். ஐ.டி. துறையில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ரவிகிரி என்ற நபர் வேடசந்தோரை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட 2 பெண்ணின் தங்கையான 15 வயது சிறுமியும் வசித்து வந்தார். இந்தநிலையில் சிறுமி கர்பம் அடைந்துள்ளார். விசாரணையில்,”ரவிகிரி, சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததும்,இதற்கு அக்கா உடந்தையாக இருந்தும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 5 முதல் 14-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு, பழனி வழித்தடத்தில் சிறப்புரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலானதுபோத்தனூா் கிணத்துக்கடவு,பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை, பழனி ஒட்டன்சத்திரம் பகுதியில் நின்று செல்லும்
➢ வடமதுரை அருகே படியூர் ஸ்ரீ அரசு துவக்கப்பள்ளி, நூற்றாண்டு விழா, மாலை 4:00 மணி.➢ பழனி சேம்பர் ஆப் காமர்ஸ் நடத்தும் 2025 – 2026 மத்திய பட்ஜெட்-ன் முக்கிய அம்சங்கள் பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி, நியூ அம்மு மார்ட் (கீழ்தளம்) பழனி, காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை➢ பழனி, நகராட்சி கீழரதவீதி தொடக்கப்பள்ளி ‘நூற்றாண்டு விழா1918-2025, மாலை 5:00 மணி.
திண்டுக்கல்லில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு<
தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் 20 நாட்களுக்கு நாள் 1க்கு 20,000 பக்தர்களுக்கு ரூ1.40 கோடி திட்ட மதிப்பில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பழனி திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை 05.02.2025முதல் 14.02.2025 10 நாட்களுக்குஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தைவேலப்பர் எதிர்புறம் உள்ள காவடி மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த கீரனூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனை பலன் அனுப்பி வைத்து மேற்படி சம்பவ குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.