Dindigul

News February 10, 2025

3 நாள்கள் இலவச தரிசனம்

image

தைப்பூசத் திருவிழா ஒட்டி பழனி மலைக்கோயிலில் இன்று (பிப்.10) முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. பொது தரிசன வழியில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளனர். மேலும், சண்முக நதி, ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் இலவசமாக பயணிக்க பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News February 10, 2025

பழனி பக்தர்களுக்கு கட்டணமில்லா பேருந்து

image

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முக்கிய திருவிழா நாட்களான 10.02.2025, 11.02.2025 மற்றும் 12.02.2025 ஆகிய மூன்று நாட்கள் பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்கள் பயன் பெறும் வகையில் அரசு நகரப் பேருந்துகள் சண்முகநதி மற்றும் இரயில் நிலையத்திலிருந்து பழனி பேருந்து நிலையம் வரை திருக்கோயில் சார்பில் கட்டணமில்லாமல் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

News February 9, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று 08-02-2025 இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News February 9, 2025

குறும்பட போட்டி ரூ.25,000 பரிசு! மிஸ் பண்ணிடாதீங்க

image

“பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது. சிறந்த 3 குறும்படங்களுக்கு ரொக்கப்பரிசு முதல்பரிசு- ரூ. 25 ஆயிரம், இரண்டாம்பரிசு- ரூ. 15 ஆயிரம்மூன்றாம்பரிசு- ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு: <<-1>>https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/ <<>>என்ற இணையதள முகவரியை பார்க்கவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 9, 2025

பழனியில் மூன்று நாட்கள் தரிசன கட்டணம் ரத்து

image

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் வரும் 11ஆம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 10 11 12 ஆகிய மூன்று நாட்கள் மலைக்கோயில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மலைக்கோயில் எவ்வித கட்டணம் இன்றி இலவசமாக தரிசனம் செய்யலாம்

News February 9, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்ச்ரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் நட்பு கொள்வதை தவிர்க்கவும். பெண்கள் போல் பேசி உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளது.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 9, 2025

டூ வீலர் மோதியதில் பழனி பாதயாத்திரை பக்தர் பலி

image

வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் பகுதியில் திருச்சி பாரதியார் தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேல் மாத்தினிபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தை உடன் வந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News February 9, 2025

திண்டுக்கல்லில் இன்றைய நிகழ்வுகள்!

image

➢ திண்டுக்கல்லில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள சாதனைப் படைத்த பெண்களுக்கு “வீர மங்கை” தாய்கூடு விருது வழங்கும் விழா, ஸ்வாகத் கிராண்டே ஹோட்டல், ( மாலை 5.00 மணி.
➢மனிதநேய மக்கள் கட்சியின் 17-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம் ஸ்ரீ மாலா நர்சரி & பிரைமரி ஸ்கூல் (சாலைத்தெரு, வேடசந்தூர், காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

News February 9, 2025

கோயிலில் திருடிய பெண் உட்பட 2 பேர் கைது!

image

கன்னிவாடி, ஆலந்தூரான்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்த 2 அடி நீளமுள்ள 3 குத்துவிளக்குகள், 1 அடி நீளமுள்ள 1 குத்துவிளக்கு ஆகிய 4 குத்துவிளக்குகளைதிண்டுக்கல், முருகபவனம் லட்சுமணபுரத்தை சேர்ந்த நாகராஜ், கொட்டபட்டியை சேர்ந்த ஜெயபிரியா ஆகிய 2 பேர் திருடி இருசக்கரவாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சித்த போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை பிடித்து கன்னிவாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News February 8, 2025

நத்தம் அருகே அரசு பஸ் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டி பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற புதுக்கோட்டை- வலையபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

error: Content is protected !!