India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க<
திண்டுக்கல்லில் இன்று (பிப்.20) இரவு 11.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, ‘முன் செல்லும் வாகனத்திற்கு 10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டியில் சங்கீதா என்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் கொலையாளி சுரேசிற்கு அடைக்கலம் கொடுத்த அழகர்கோவில்- வலையப்பட்டியை சேர்ந்த சித்திரையன், அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். கொலையாளியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்து அவரை தப்பிக்க வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
செம்பட்டி: ”தமிழ் மொழி இனி உலகை ஆளும்” என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். எஸ்.பாறைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தும், ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தும் அவர் பேசியதாவது: 1965 முதல் தற்போது வரை தமிழகத்தின் தாய் மொழியான தமிழை ஆட்சி மொழியாக வைத்துள்ளோம். இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஹிந்தி நமக்கு தேவையில்லை என்றார்.
வத்தலக்குண்டு அருகே இருவரைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த இளைஞர் உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனா். இந்நிலையில், கைதான நவீன் என்பவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது அவரது வலது கால் உடைந்ததால், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்: திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியாக திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதி ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மீன் வளர்க்கும் விவசாயிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள, மீன் விற்பனையாளர்கள், நல வாரியம் மற்றும் பி.எம்.எம். கே எஸ் எஸ் ஒய் திட்டத்தில் சேர நேருஜி நகரில் உள்ள மீனவர் நல இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள திண்டுக்கல் கலெக்டர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் புதிரை வண்ணான் 475 குடும்பம் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. புதிரைவண்ணார் இன மக்கள் 475 குடும்பங்கள் வசிப்பதாகவும் விடுபட்டவர்கள் திண்டுக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் பிப்ரவரி 27க்குள் பதிவு செய்ய கலெக்டர் சரவணன் இன்று தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசௌந்தரராஜன் பெருமாள் திருக்கோவில் இன்று தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான திரைப்பட நடிகர் யோகி பாபு வந்தார். அவரை கண்ட பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Sorry, no posts matched your criteria.