India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் இ.பெரியசாமி. அ.ர.சக்கரபாணி கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பற்றி பேசினர்.
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.02.2025 அன்று சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளை கேட்டறியவும் உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் சார்பில் வரும் 3.3.2025 அன்று இலவச திருமணம் திண்டுக்கல் ஸ்ரீ அபிராமி அம்மன் திருக்கோயிலில் நடைபெற உள்ளது. இதில் மணமக்களுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் மற்றும் 4 கிராம் தங்க தாலி வழங்கப்பட உள்ளது. திருமணம் செய்ய விருப்பமுள்ள மணமக்கள் 9843575929 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கலில் இன்றைய (பிப்.22) நிகழ்வுகள். ■பழனி சட்டமன்ற தொகுதி கொடைக்கானல் பகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை எம்எல்ஏ செந்தில்குமார் திறந்து வைக்கிறார். ■பழனி நெய்க்காரப்பட்டியில் போராளி பழனி பாபா பெரும்புகழ்ப் போற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் மாலை 4 மணிக்கு நடக்கிறது. ■ திண்டுக்கல் ஐ.என்.டி.யூ.சி., மாநில செயற்குழு கூட்டம் நாயுடு மஹாஜன மஹாலில் காலை 10 முதல் மாலை 4 மணி நடக்கிறது.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, திண்டுக்கல் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா்கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தடை விதித்தனா். இந்நிலையில் நேற்று முதல் பேரிஜம் ஏரியைப் பார்வையிட வனத்துறை சாா்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன்கோயில் மாசித் திருவிழாவையொட்டி, முகூா்த்தக்காலுக்கு நேற்று இரவு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. பமுகூா்த்தக்காலை கோயிலின் வெளிப்புறமாக ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று (பிப்.21) இரவு 11.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில், நிலத்தில் போர் அமைக்க பயன்படுத்தும் லாரி தீப்பிடித்து எரிவதாக, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புதுறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (21.02.2025) 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவலர் மற்றும் அமைச்சு பணியாளரின் 2 பிள்ளைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் வழங்கினார்கள்.
Sorry, no posts matched your criteria.