India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம். திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம் திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். மற்ற தகவலுக்கு 100ஐ தொடர்பு கொள்ளவும்.
தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு முழுவதும் காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களது தொலைபேசி எண்ணையும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சின்னாளபட்டி அருகே மேலக்கோட்டையில் இன்று மாலை நிலக்கோட்டையிலிருந்து சின்னாளபட்டி வந்த தனியார் பேருந்தும், சின்னாளபட்டியிலிருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. பயணிகள் யாருக்கும் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே கோதை மங்கலத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீ பரத். தேரடியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். பேச்சு ,மாறுவேடம், ஓவியம், ஸ்கேட்டிங், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விருதுகளை வாங்கி குவித்து வரும் சிறுவன் தற்போது 2024 ஜக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு உலக சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.
தமிழ்நாட்டின் எம்பி எண்ணிக்கை 39 இல் இருந்து 31 ஆக குறைத்த மத்திய பாஜக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக விரோதம் என்றார். திண்டுக்கல்லில் செய்தியாளரிடம் கூறுகையில், தமிழக முதல்வர் மார்ச் 5ஆம் தேதி கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். அலட்சியம் பெரும் விபத்தை ஏற்படுத்தும். ஏற்படுத்தும்’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (பிப்.25) செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது குறித்த அறிவிப்பு புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. தினமும் இது போன்ற ஆன்லைன் மோசடிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு அடங்கிய வாசனங்கள் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மூலம் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றது.
திண்டுக்கல் நகர் மையத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் படுகாயம் அடைந்தார். மாணவன் இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மத்திய அரசின் முன்மொழி கல்வி கொள்கையை எதிர்த்து மாவட்ட மாணவரணி சார்பில் வேடசந்தூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரா எஸ்டி சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.