India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி அருகே பாப்பம்பட்டி பிரிவில் நேற்று இரவு மாட்டு வண்டியும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மாட்டு வண்டியில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி இந்த விபத்து குறித்து விசாராணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் N.S.நகர் அருகே R.R. நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய RVS-நகர் பகுதியில் சேர்ந்த கமலகுமார் தேவி(39), திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகபாண்டி(35) ஆகிய 2 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்து அங்கிருந்த 2 பெண்களை மீட்டு அவர்களை காப்பகத்தில் சேர்ந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தேவி & முருகபாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஈரோடு கொடுமுடியைச் சேர்ந்த பசுபதிகுமார் (27) என்பவர் இன்று குடும்பத்தினருடன் மதுரை நோக்கி வேனில் சென்றனர். வேன் வேடசந்தூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பசுபதிக்குமாரின் தாயார் பர்வதம் உள்பட இருவர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் அடிக்கடி தங்களது சமூக வலைதள கணக்கின் கடவுச்சொற்களை மாற்றிக் கொள்ளவும்’ பதிவினை பதிவிட்டு விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகரப்பகுதிகளில் இன்று இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் பாஜக சார்பில் ஹிந்தி மொழி விழிப்புணர்வு போஸ்டர் ஆனது நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்தும் அதை கற்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாணார்பட்டியை அடுத்த காவிரிசெட்டிபட்டியில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்பான பிரச்சனையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தையை கைது செய்தனர். ரஞ்சித்குமார் வளர்க்கும் சண்டை சேவலை வேறு இடத்தில் கட்டிய தந்தை முனியாண்டி வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் மகன் ரஞ்சித்குமார் உயிரிழந்தார்.போலீசார் தந்தை முனியாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சிறுமலையில் ஜெலட்டின் குச்சிகள், பேட்டரி ஆகியவற்றோடு சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பயங்கரவாத செயல்கள் இல்லையென போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஜான்ஷாபு என்பவர், தோப்புகளை குத்தைக்கு எடுத்து, கிணற்றின் பாறைகளை உடைக்க ஜெலட்டினை வாங்கி வந்துள்ளார். அவற்றை இயக்கிய போது வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்ததாக கூறுகின்றனர்.
திண்டுக்கல்லில் இன்று (01-03-2025) இரவு 11.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) மற்றும் க்யூ பிரான்ச் போலீசார் ஏற்கெனவே விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘வாகனத்தில் பயணம் செய்யும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்’ பதிவினை பதிவிட்டு விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.