India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: இன்ஸ்டாகிராமில் ஃபேக் ஐடி மூலம் இளம்பெண்ணிடம் தோழி போல் பழகிய நபர் ஆபாச படத்தை அப்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் ஆபாச படம் அனுப்பிய நபரிடம் ’நேரில் பேச வேண்டும் வாருங்கள்’ என அந்த நபரை ஆசை வார்த்தை காட்டி அழைத்துள்ளார். நேரில் சந்திக்க வந்த அந்த நபரை உறவினர்களுடன் சென்று மடக்கிப் பிடித்த அப்பெண் நடு ரோட்டிலேயே வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் வெள்ளி மலை உச்சியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு தமிழ் மாத கடைசி வெள்ளி சிறப்பு வாய்ந்த நாளாகும். மேலும் இக்கோயிலில் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் தங்கி, தீர்த்தகிணற்றில் நீராடினால், பிள்ளைபேறு கிடைக்கும். அதுமட்டுமல்லாது நோய்வாய்ப்பட்டவர்கள் மனஉளைச்சலில் தவிப்பவர்களுக்கு, இக்கோயில் தங்கி முருகனை வழிப்பட்டால் நலம் பெறுவார்கள்.
2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶ திண்டுக்கல்லில் அன்புச் சோலை மையங்கல்.
▶திண்டுக்கல்- நத்ததில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்.
திண்டுக்கல், சின்னாளபட்டி அருகேவுள்ள காந்திகிராம பல்கலையின் முதுநிலை, இளநிலை படிப்புகள், பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சேர விருப்புவோர் <
திண்டுக்கல்லில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர்,ஒட்டன்சத்திரம், பழனி கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, கொடைக்கானலுக்கு வார நாளில் 4000, வார இறுதியில் 6000 வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசுப்பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது. உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. இந்த கட்டுப்பாடுகள் ஜூன் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று “குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமரா மிக அவசியமான ஒன்றாகும்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்- சபரிமலை இடையே பக்தர்களின் நலன் கருதி புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று கோரிக்கை விடுத்துள்ளாா். திண்டுக்கல்- சபரிமலைக்கு புதிய ரயில் தடம் அமைக்கப்பட வேண்டும் என்பது தேனி நாடாளுமன்றத் தொகுதியின் முக்கியமான கோரிக்கையாகும்.
திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு B.Com, B.Sc, ITI, M.Com, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை மார்ச்.14 கடைசி நாள் ஆகும். <
நிலக்கோட்டை ஒன்றியம் எத்திலோடு ஊராட்சியில் குப்பை அகற்றும் வாகனம் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதை அறிய திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் இன்று பெண் தூய்மை பணியாளர் உடன் குப்பை அகற்றும் வாகனத்தில் பயணித்தார். ஆட்சியரின் இந்த நடவடிக்கையை சற்றும் அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.