Dindigul

News March 16, 2025

திண்டுக்கல்லில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதை மற்ற இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழப்பு

image

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினா் அந்த சிறுத்தை பூனைக் குட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சாமியாா்ச் சோலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு நடத்தி வருகின்றனா்.

News March 16, 2025

திண்டுக்கல் மாவட்ட வழங்கல் துறை அறிவிப்பு

image

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை மார்ச் 31க்குள் சரிபார்த்து KYC முடிக்க வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட வழங்குத்துறை இன்று அறிவித்துள்ளது, மேலும் குடும்பத்தினர் அனைவரும்KYC, செய்யத் தவறினால் அவர்களுக்கு ரேஷன் பொருள் வழங்குவது நிறுத்தப்படலாம்,மேலும் அவர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News March 16, 2025

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி குழந்தை உயிரிழப்பு

image

திண்டுக்கல்,வேடசந்துார் அருகே உள்ள கள்வர்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்(29), தனலட்சுமி தம்பதியினர். இத்தம்பதிக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு மார்ச் 12-ம் தேதி தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தது.

News March 15, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 15.03.2025 இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 15, 2025

TN BUDGET: திண்டுக்கல்லுக்கு முக்கிய அறிவிப்பு

image

▶️ நத்தம்-புளி, ஆயக்குடி-கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கைக்கு புவிசார் குறியீடுகள் பெற நடவடிக்கை.
▶️ திண்டுக்கல்லில் மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.6 கோடி.
▶️ ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
▶️ வெண்ணைப்பழ சாகுபடி ஊக்குவிக்க ரூ.69 லட்சம்.

News March 15, 2025

திண்டுக்கல்லில் வேலை! நல்ல சம்பளம்

image

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் MTS, Security, Case Worker என காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு . B.Sc, BA, BL, Law, Literate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.18,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. கடைசி நாள் மார்ச்.20ஆகும். திண்டுக்கல் மக்களே SHARE பண்ணுங்க

News March 15, 2025

பெண்ணுக்கு ஆபாச படம்: சுளுக்கெடுத்த குடும்பம்

image

திண்டுக்கல்: இன்ஸ்டாகிராமில் ஃபேக் ஐடி மூலம் இளம்பெண்ணிடம் தோழி போல் பழகிய நபர் ஆபாச படத்தை அப்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் ஆபாச படம் அனுப்பிய நபரிடம் ’நேரில் பேச வேண்டும் வாருங்கள்’ என அந்த நபரை ஆசை வார்த்தை காட்டி அழைத்துள்ளார். நேரில் சந்திக்க வந்த அந்த நபரை உறவினர்களுடன் சென்று மடக்கிப் பிடித்த அப்பெண் நடு ரோட்டிலேயே வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

News March 14, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

திண்டுக்கல்லில் இன்று 14-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News March 14, 2025

இன்ஸ்டாவின் ஃபேக் ஐடி ஆசாமி ; ஸ்கெட்ச் போட்டு பிடித்த இளம்பெண்

image

திண்டுக்கல்: இன்ஸ்டாகிராமில் ஃபேக் ஐடி மூலம் இளம்பெண்ணிடம் தோழி போல் பழகிய நபர் ஆபாச படத்தை அப்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் ஆபாச படம் அனுப்பிய நபரிடம் ’நேரில் பேச வேண்டும் வாருங்கள்’ என அந்த நபரை ஆசை வார்த்தை காட்டி அழைத்துள்ளார். நேரில் சந்திக்க வந்த அந்த நபரை உறவினர்களுடன் சென்று மடக்கிப் பிடித்த அப்பெண் நடு ரோட்டிலேயே வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!