Dindigul

News October 8, 2024

பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

image

திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சியைச் சேர்ந்தவர் வாணிஸ்ரீ. இவர் இன்று நத்தம் ரோடு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் சென்ற பேட்டரி இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பதற்றம் அடைந்த வாணி ஸ்ரீ, வாகனத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு தூரம் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News October 8, 2024

திண்டுக்கல்: விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் விவசாயிகளுக்கு, பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, மீன்களிலிருந்து தயார் செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்ற இனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. அக்-16,17,18 தேதிக்குள் ஆர்வமுள்ள பயனாளிகள் 9943366375, 9751664565, 9750430221 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

போதைப் பொருட்கள் விற்பனை செய்த 127 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 397 தணிக்கைகள் செய்யப்பட்டு, 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 72 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 2,844 கடைகள் தணிக்கை செய்யப்பட்டு, 576.89 கிலோ கைப்பற்றப்பட்டு, 129 கடைகள் சீலிடப்பட்டன. இதுதொடர்பாக 55 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

கொடைக்கானலில் மின்னல் வெட்டு

image

கடந்த ஒரு வார காலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது அதிலும் குறிப்பாக கொடைக்கானல் பகுதியில் இரவு பலமான மழை பெய்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் இன்றைய தினம் பலத்த மின்னல் இடியுடன் மற்றும் மழை பெய்து கொண்டிருக்கிறது. கண்களைப் பறிக்கும் மின்னல். அழகு காட்சி அழகு என்றாலே ஆபத்து தான்.

News October 7, 2024

திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 7826012051, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

சமூக வலைதளங்களில் அச்சுறுத்தல் பதிவு 2 பேர் கைது!

image

வத்தலகுண்டு பகுதியில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அச்சுறுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பதிவிட்ட வத்தலகுண்டு, காந்திநகர் பகுதியை சேர்ந்த முகமது சல்மான்கான்(22) மற்றும் வத்தலக்குண்டு இபி காலனி பகுதியை சேர்ந்த முருகன் மகன் அபினேஷ்வர்(21) ஆகிய 2 பேரை வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி தலைமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News October 7, 2024

திண்டுக்கல்லில் 2 தனிப்படைகள் அமைப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் ரவுடிகள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பிற மாவட்டங்களில் தலைமறைவாக இருந்தாலும், அவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அ. பிரதீப் தெரிவித்தார்.

News October 7, 2024

திண்டுக்கல்லில் இதை செய்தால் நடவடிக்கை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறாக பதிவிடும் நபர்களை போலீசார் கண்காணித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார். மேலும், சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

News October 6, 2024

ரேஷன் கடைகளில் கூடுதல் கோதுமை- அமைச்சர் பேட்டி

image

திண்டுக்கல் அருகே வடகாட்டில் இன்று புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்றும், தமிழ்நாட்டுக்கு 25,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தோம் எனவும் அவர் கூறினார்.

News October 6, 2024

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் whatsapp ஸ்டேட்டஸ், story, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறாக பதிவிடும் நபர்களை போலீசார் கண்காணித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்,