India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் 22 தேர்வு மையங்களில் 6200 பேர் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக மொத்தம் 6 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, 23 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி அபிநவ் குமார் உத்தரவிட்டார். இதேபோல் 48 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 53 கொலைகள் நடந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் பழிக்கு பழி, முன்விரோதம் என பலதரப்பட்ட காரணங்களால் இதுவரை 32 கொலைகள் நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க தற்போது குற்றவாளிகளின் பட்டியலை மாவட்ட போலீசார் தயாரித்துள்ளனர். இதில் 500 க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய மற்றும் நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கடையின் செயல்பாடுகள் குறித்து புகார் மனுக்களை முகாமில் கொடுக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், கள்ளிமந்தையில் 2015 இல் நெடுஞ்சாலை அமைக்க நிலம் ஒப்படைத்த 16 பேருக்கு ரூ.132 கோடி இழப்பீடு வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினிகள், 40 பீரோ, 40 இருக்கைகள், 20 டேபிள், 25 மின்விசிறி, 2 ஜீப்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற ஜூலை.19 அன்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாய கடன், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த, கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும்படி மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் மக்களின் நலன் கருதி பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் 13.07.24 அன்று காலை 10 மணி முதல் ஒரு மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆண்டில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெற விவசாயிகள் விண்ணப்பத்துடன் பயிர் சாகுபடி செய்வதற்கான அடங்கல், ஆதார் அட்டை நகல்,வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன் இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.