India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் ‘கலைஞரின் கனவு இல்லம்’, ‘கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்’ ஆகிய திட்டங்களின் கீழ் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.இதில் விடுபட்ட தகுதியுடைய பயனாளிகளின் பட்டியலை கிராம சபையில் ஒப்புதல் பெற, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணியளவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் – திருப்பூர் அணிகளுக்கு இடையேயான TNPL கிரிக்கெட் போட்டி நேற்று கோவையில் நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால், 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, முதலில் ஆடிய திருச்சி அணி, 20 ஓவர்கள் முடிவில் 108/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி, அதிரடியாக விளையாடி 12 ஓவர்களிலேயே இலக்கை எட்டி (111/2) வெற்றிபெற்றது.
அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் மானிய கோரிக்கையில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதற்காக, இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாடுத்துறை மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர் சக்கரபாணி இன்று நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று கொண்ட காவல் கண்காணிப்பாளர் அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தர் ராஜா பெருமாள் ஆலயத்தில் வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை கோவில் அறங்காவல் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் செயல்படுத்த பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களாகவும், 3000 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடம் இருக்க வேண்டும். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 19.07.2024 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.