Dindigul

News July 21, 2024

11 புதிய பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 11 புதிய பேருந்து இயக்கத்தை இன்று(ஜூலை 21) தொடங்கி வைத்தார். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திருமலைச்சாமி, கீரனூர் பேரூராட்சி தலைவர் கருப்புச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 21, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

திண்டுக்கல் வரப்போகும் புதிய சுற்றுலா தலம்

image

திண்டுக்கல் அடுத்த பெரும்பாறையில் புல்லாவெளி நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. இதற்கு பெரும்பாறை, மஞ்சள் பரப்பு, கானல்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பெய்யும் மழை நீரே ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், புல்லாவெளி நீர்வீழ்ச்சியை தமிழ்நாடு சுற்றுலா துறையின் கீழ் தரம் மேம்படுத்தப்பட்டு விரைவில் சுற்றுலா தலமாக மாற்றும் பணி துவங்கப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 21, 2024

ஆசிரியர் தேர்வு 37 பேர் எழுதவில்லை

image

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எஸ்.பி பள்ளி, புனித வளனார் பெண்கள் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 49 தேர்வு அறைகளில் நடைபெற்ற தேர்வில் 927 நபர்கள் தேர்வு எழுதினார்கள். மேலும் 37 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை 96 சதவீத நபர்கள் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 21, 2024

விவசாயிகளுக்கு 700 டன் இயற்கை உரம்

image

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் நாள் 1க்கு 85 டன் குப்பைகள் மற்றும் பண்டிகை காலங்களில் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதன் மூலம் 12 இடங்களில் நுண்ணுயிர் செயலாக்க மையம் அமைக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இதுவரை 700 டன் உரங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

100% தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கான பாராட்டு விழா

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த பள்ளிகளுக்கான பாராட்டு விழா திண்டுக்கல் SFI சார்பில் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார். SFI மாநில தலைவர் சமச்சீர் அகமது, பேராசிரியர் சேதுராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர். இதில், பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 20, 2024

திண்டுக்கல்: கொலையாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை

image

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் செல்வகுமார். இவரது சகோதரியை அசோக்குமார் என்பவர் பெண் கேட்டுச் சென்றுள்ளார். இதற்கு செல்வகுமார் வீட்டார் சம்மதம் தெரிவிக்காதத்தையடுத்து, அசோக்குமார் மற்றும் அவரது 2 நண்பர்கள் இணைந்து செல்வகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் கொலையாளிகள் மூவருக்கும் திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

News July 20, 2024

ரூ.4.66 கோடி முறைகேட்டில் உதவியாளருக்கு வலைவீச்சு

image

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சரவணன், சாந்தி, சதீஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடுகள் தொடர்பாக ஆணையர் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் மாநகராட்சி அலுவலகத்தில் முறைகேடு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் போலீசார் சரவணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

News July 20, 2024

காவல்துறை வேட்டையில் 57 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஜான் உத்தரவின் பேரில் ரவுடிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு துப்பாக்கியுடன் போலீசார் 2 வாரங்களாக முக்கிய பகுதியில் ரோந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தலைமறைவாக இருந்த 8 ரவுடிகள் என குற்ற பின்னணி கொண்டவர்கள் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

error: Content is protected !!