India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் எம்.டெக் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதுநிலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேர கல்வித்தகுதி பி.இ., பி.டெக் அனைத்து துறைகள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் https://ruraluniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9626302737, 9025520705 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 11 புதிய பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்காக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கிவைத்தார். பின்னர் தமிழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5000 கோடி மதிப்பில் 7,666 பேருந்துகள் கொள்முதல் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
திண்டுக்கல் கொத்தம்பட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் மத்திய அரசு ஊழியர்கள், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினருடன் பணியாற்றலாம் என்று கூறியது ஏற்புடையது அல்ல. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு முறையாக நிதி ஒதுக்குவதில்லை. தமிழகத்தை எத்தனை முறை சசிகலா சுற்றி வந்தாலும் அ.தி.மு.க வில் இணைய முடியாது என கூறினார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (ஜூலை 22) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது தமிழ்நாடு அரசு சார்பில் இராஜகோபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தமிழ்ச் செம்மல் விருதாளர் இராஜகோபாலுக்கு பொன்னாடை அணிவித்து நூலை பரிசாக வழங்கி சிறப்பு செய்து பாராட்டினார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழநி மின்கோட்டத்திலுள்ள பாப்பம்பட்டி, தாளையூத்து துணை மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கபட்டு, நாளை மறுநாள் ஜூலை 24ஆம் தேதியன்று மின்தடை இருக்கும் என்றும், நாளை மின்தடை இருக்காது என்றும் பழநி மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், மினுக்கம்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை( ஜூலை.23) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒட்டன்சத்திரம், மினுக்கம்பட்டி துணைமின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவதற்கான நேரடி நியமன போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை.21) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 964 பேர் விண்ணப்பித்திருந்தனர். 3 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 927 பேர் எழுதினர். 37 பேர் தேர்வு எழுத வரவில்லை.
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 176 ரன்கள் அடித்து வென்றது.
Sorry, no posts matched your criteria.