India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரியில் டிஎன்பிஎல் 2024 இறுதிக்கட்ட லீக் போட்டி இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இதில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணி மோதின. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியல்களில் பணம் செலுத்துகின்றனர். உண்டியலில் இந்த மாத எண்ணிக்கை இன்று (ஜூலை 26) வெளியிடப்பட்டது. அதில் 2 கோடியே 78 லட்சத்தி 1835 ரூபாய் உண்டியல் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் தற்போது டிஎன்பிஎல் 2024 இறுதி கட்ட லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணி மோதுகின்றன. திண்டுக்கல் டிராகன் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தற்போது திண்டுக்கல் அணி ஒரு விக்கெட்டை இழந்த நிலையில், இந்திரஜித்தும், எஸ்.சிங்கும் விளையாடி வருகின்றனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசனில் இதுவரை சேலம், கோவை, திருநெல்வேலியில் லீக் போட்டிகள் நடந்து முடிந்தது. அடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம், என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று(ஜூலை.26) முதல் ஜூலை.28 வரை இறுதி கட்ட லீக் போட்டிகளும், ஜூலை 30, 31ஆம் தேதி பிளே ஆஃப்ஸ் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 7.15 மணியளவில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணி மோதுகின்றன.
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து பல்வேறு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு 2025 அமித் பாரத் திட்டத்தின் கீழ் பிளாட்பாரத்தில் அலுவலகம், ஓய்வு அறை அமைக்க ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ.சி யின் கவிதா சமகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் குறைதீர் கூட்டம் ஜூலை.29 இல் பழனி இ.எஸ்.ஐ.சி கிளை அலுவலகத்தில் காலை.9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ.சி காப்பீட்டாளர்கள், பயனாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என துணை மண்டல இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். SHARE IT
திண்டுக்கல் நல்லாம்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு பருத்தி இரக சேலை உற்பத்தி செய்ததற்கான சிறந்த நெசவாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய கைத்தறி விருது வழங்க ஆணை வழங்கபட்டுள்ளது. இவருக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய கைத்தறி தின விழாவில் மத்திய அரசால் சிறந்த கைத்தறி நெசவாளர் “Sant Kabir National Award 2023” தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை(ஜூலை 26) நடைபெறுகிறது. எனவே விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
செம்பட்டி அருகே உள்ள கூட்டுறவு கலை அறிவியல் கல்லூரியில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது; தமிழக மாணவர்களில் கல்வித்தரம் உயர்ந்து வருகிறது. மேலும், திண்டுக்கலில் 6 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.அதனுடன் நத்தம் தொகுதிக்கு புதிய அரசு கல்லூரி கொண்டுவரப்படும் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உடனிருந்தார்.
Sorry, no posts matched your criteria.