India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் “SEED” திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதில் பயன்பெற விரும்புவோர் மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில், உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்குநரகம் மூலம் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் வரும் ஆகஸ்ட் 07 முதல்09 தேதி வரை விரால் மீன் வளர்ப்பு, பண்ணைக்குட்டைகளில் கூட்டின மீன் வளர்ப்பு மதிப்பு கூட்டப்பட்ட மீன் உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே பயனாளிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள கரடி கூட்டம் ஊராட்சி பகுதியில் சண்முகநதி குடிநீர் திட்டம் மற்றும் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி என ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை இன்று பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் துவக்கி வைத்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடி 18ல் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டதால் பெரும்பாலான சனிக்கிழமை வேலை நாட்களாக இருக்கும் என பள்ளி கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆக. 3ம் தேதி ஆடி 18 என்பதால் அன்றைய தினம் பள்ளி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மறைந்த இயக்குநர் ராசு மதுரவன் குடும்பத்திற்க்கு
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் நிதி உதவியளித்துள்ளார். மாயண்டி குடும்பத்தார் முத்துக்கு முத்தாக
உள்ளிட்ட படங்களை எடுத்த மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் குடும்பம் கஷ்டத்தில் உள்ளது என தகவல்
வெளியான நிலையில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் மூலம் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஸ்ரீ பரதாலயா கலை பண்பாட்டு மையம் சார்பில் மாநில அளவிலான உலக சாதனை பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்ற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் கலைக் கல்லூரி வளாகத்தில் அறநிலை துறை சார்பாக அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான லோகோவை அறநிலைத்துறையின் மூலம் திருக்கோயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு தேவையான அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.
டிஎன்பிஎல் 2024 சீசனில் ப்ளேஆஃஸ் சுற்றுக்கு கோவை, திருப்பூர், சேப்பாக், திண்டுக்கல் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் நாளை குவாலிஃபயர் 1 போட்டி நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் எந்த அணி பெறும் என்றும் தங்களின் கருத்துக்களை பதிவிடவும்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 232 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழனிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவு படி அமைச்சர் சேகர் பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பழனியில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி இரு தினங்களுக்கு பழனிக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.