India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஏப்.10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஆடு, கோழி, மீன் என அனைத்து இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிமையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து வைக்க வேண்டும். மேலும் விற்பனையோ, வதையோ செய்யக்கூடாது. தவறும் பட்சத்தில் கடை உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல் : வன்னியபாறைப்பட்டி உள்ள நாகராஜ் என்கிற பைனான்ஸ் பணம் வசூல் செய்பவர் சமீபத்தில் குளிப்பட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இதுகுறித்த விசாரணையில் கொடுத்த கடனை திருப்பி கேட்டதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தைபட்டியைச் சென்ற கிரி(21) ,மாதவன்(23),சுகுமார்(24) உட்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.
திண்டுக்கல்லில் உள்ள சின்னாளபட்டிக்குப் பல சிறப்புகள் உண்டு. அதில், ஆன்மீக சிறப்புகளில் மிக முக்கியமான ஒன்று அங்குள்ள சதுர்முகன் முருகன் கோயில். இங்குள்ள முருகனுக்கு பாலில் குங்குமம் கலந்து அபிஷேக செய்வது வழக்கம். இந்தச் சதுர்முகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீர்ந்து, திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். பிரச்சனை உள்ள உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 235 பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கார் ஷோரூம் நிறுவனத்தில் சேல்ஸ் துறையில் பணி புரிய ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 34 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு டிப்ளமோ படித்த மாணவர்களும் விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30. <
திண்டுக்கல் மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கீழ் கண்ட லிங்கை அணுகவும் <
கொடைக்கானல் – வத்தலகுண்டு கெங்குவார்பட்டி அருகே கொடைக்கானலில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்ற டூரிஸ்ட் பஸ் நேற்று(ஏப்.5) சனிக்கிழமை அதிகாலை, 3:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்து மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கொடைக்கானல் மற்றும் பெருமாள் மலையைச் சேர்ந்த ஆறுமுகம், (43), எட்வின்(42) உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இந்தியாவை உலுக்கிய நோய் காலரா. அப்படிப்பட்ட கொடிய நோயை தீர்த்து வைத்த கடவுளாக நம்பப்படுவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை மாரியம்மன். இந்த மாரியம்மன் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தம் அம்மை முதலான பல நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது என அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. நோய் பாதிப்படைந்த உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடை கொண்டு போங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.