India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தலையாறு அருவி (Thalaiyar Falls), அல்லது (Rat Tail Falls) எலிவால் அருவி கொடைக்கானல் செல்லும் வழியில் டம் டம்பாறை காட்சி முனையில் இருந்து பார்த்தால் தெரியும் இந்த அருவி. இது 975 அடி (297 மீ) உயரமான தமிழ்நாட்டின் உயரமான அருவியாகவும் , இந்தியாவின் ஆறாவது உயர்ந்த அருவியாகவும் , உலகின் 267வது உயர்ந்த அருவியாகவும் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. எனவே மக்கள் கலந்து கொண்டு பயன் பெற மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். இன்று தனியார் விடுதியில் தங்கியவர்கள் விஷம் அருந்தி உயிரிழந்தனர். இறந்த நான்கு பேரின் சடலங்களை மீட்ட காவல் துறையினர் கொலையா, தற்கொலையா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ் புதல்வர் திட்டத்தினை திண்டுக்கல்லில் துவக்கி வைத்தார்.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் 48 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திற்கு 10 விருது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சியில் மதுபான கடையில் திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அட்டைபெட்டியில் இருந்த பணத்தை போலீசார் எடுத்து சென்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவதொடங்கியது. இதையடுத்து எஸ்ஐ முத்துகுமார், காவலர்கள் ஜேம்ஸ், மணிகண்டன், கல்யாண் குமார் ஆகியோர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பட்டிவீரன்பட்டியில் கணவரை பழிவாங்க அவரின் விலை உயர்ந்த டூவீலரை ஸ்கெட்ச் போட்டு திருடிய மனைவி தலைமறைவான நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தன்னை பிரிந்து சென்ற கணவர் எழில்மாறன் விலை உயர்ந்த டூவீலரில் ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்து கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி, உறவினர்கள் உதவியுடன் டூவீலரை திருடியது தெரிந்தது. டூ வீலரை கைப்பற்றிய போலீசார் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு முகாம் மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய கோர்ட் வளாகத்தில் நடைபெறவுள்ளது. நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ள அசல் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். 044-28888060, 044-28888077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்ததாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து சரவணன் என்பவரை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய நிர்வாக அலுவலர் வில்லியம், கண்காணிப்பாளர் சாந்தி ஆகிய 2 பேரையம் இன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.
திண்டுக்கல் நெசவாளருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஜி.பாலகிருஷ்ணன் பருத்தி இரக சேலை உற்பத்தி செய்ததற்கான சிறந்த நெசவாளர்களுக்கு தேசிய கைத்தறி விருது வழங்க ஆணையிடப்பட்டது. அவர் புதுதில்லியில் நடைபெற்ற தேதிய கைத்தறி தின விழாவில் மத்திய அரசால் சிறந்த கைத்தறி நெசவாளர் “சாந்த் கபீர் தேசிய விருது 2023” தேசிய விருது வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.