Dindigul

News August 11, 2024

திண்டுக்கல்: ரேபிஸ் நோய் பரவுதலைத் தடுக்க யோசனை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் பரவுதலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக நாய் கடித்துவிட்டால் தாமதமின்றி அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கடித்தது வெறிநாய் என்றால் உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ஆண்டுக்கு ஒருமுறை வெறிநோய் தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் பரவலைத் தடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News August 11, 2024

திண்டுக்கல்லில் துப்பாக்கி சூடு நடத்திய முதியவர்

image

சிறுமலையில் முதியவர் துப்பாக்கியால் சுட்டதில் பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் வெள்ளையன்(18) காயம் அடைந்தார்.80 வயதான முதியவர் சவேரியர் முன்விரோதம் காரணமாக இளைஞரை கள்ள துப்பக்கியால் சுட்டதாக சொல்லப்படுகிறது. முதியவர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த இளைஞர் வெள்ளையன் மதுரை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.சுட்டுவிட்டு தப்பியோடிய முதியவர் சவேரியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

News August 11, 2024

திண்டுக்கல்லை சேர்ந்த குடும்பம் தற்கொலை: என்ன காரணம்?

image

திண்டுக்கல்லை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் நேற்று முன்தினம் புதுச்சேரியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து, உறவினர்களிடம் புதுச்சேரி போலீசார் விசாரித்தனர். நகை உருக்கும் தொழில் செய்துவந்த சந்திரசேகர், திருட்டு நகைகள் வாங்கிய புகாரில் சிக்கியதால் போலீசார் விசாரணை நடத்தியதாகவும்,அதனால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

News August 10, 2024

திண்டுக்கல் தலைப்பு செய்திகள்

image

➤திண்டுக்கல் வட்ட ஆட்சியர் அலுவலங்களில் இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
➤ திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
➤ கொடைக்கானல் விடுதியில் 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
➤ தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் வெள்ளி தேர் இழுக்க முன்பதிவு அவசியம்

News August 10, 2024

திண்டுக்கல் மாநகராட்சியில் இணையும் ஊராட்சிகள்

image

திண்டுக்கல் மாநகராட்சி உடன் இணைக்கப்படும் பகுதிகள் வெளியீடு. பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பள்ளப்பட்டி, பொன்மாந்துறை, பிள்ளையார் நத்தம், அடியனூத்து, தோட்டனூத்து, முள்ளிப்பாடி ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வரைபடம் இன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

News August 10, 2024

திண்டுக்கல்லில் வெள்ளிதேரோட்டம் முன்பதிவு

image

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில், வெள்ளிதேரோட்டம் இனிமேல்
தினமும் நடைபெறும் என்று அறங்காவலர் குழுவினால் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளித்தேர் இழுக்க விரும்பும் பக்தர்கள் தொலைபேசி எண்- 9943417289 அரவிந்தன் மற்றும் வாசுதேவன் 9362936203 திருக்கோயில் பணியாளர்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News August 10, 2024

திண்டுக்கல்: வைகை குடிநீர் பணிகள் துவக்கம் எப்போது?

image

ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி ” மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தில் 75 நிறுவனங்களில் படிக்கும் 5112 மாணவர்கள் பயன் பெறுவர். ஆத்தூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.550 கோடி மதிப்பிலான வைகை அணை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.

News August 10, 2024

திண்டுக்கல்: பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆக.10 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு மனு அளித்து பயன்பெறலாம்.

News August 10, 2024

திண்டுக்கல்: ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை

image

திண்டுக்கல் வடக்கு ரத வீதி கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). இவர் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்று ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்நிலையில், 4 பேரும் விடுதி அறையில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது நேற்று பிற்பகல் தெரியவந்தது. இது குறித்து புதுச்சேரி பெரியகடை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 9, 2024

தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி பற்று அட்டை

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி, கள்ளிமந்தையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!