India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுயதொழில் தொடங்கிட ஊரக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு ‘மதி சிறகுகள் தொழில் மையம்’ மூலம் பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவை மற்றும் வணிக ஒருங்கிணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, 93605-00680, 83008-39362 எண்களில் அறியலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் 350க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டியதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்களுக்குள் கட்டடதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் 2024, 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி செப்டம்பர், அக்டோபரில் நடைபெற உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் https://sdat.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று திங்கட்கிழமை முதல் வரும் 17ஆம் தேதி வரை மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டின் பெருந்துயராக மாறியுள்ளது. இந்நிலையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, திண்டுக்கல் சீலப்பாடியை சேர்ந்த ஜான்சன் என்பவரின் 2 குழந்தைகள் கடந்த 6 மாதங்களாக சேர்த்து வைத்த ரூ.5,000 பணத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.
சிலம்ப போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து, பயிற்சியாளர் தலைமையில்,45 மாணவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றனர். இதில் 13 மாணவர்கள் பயிற்சியாளருக்கு தெரியாமல் நேற்று கடலுக்கு சென்று குளித்தனர். அப்போது 3 பேர் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நிலையில், நிலக்கோட்டையை சேர்ந்த 11,13 வயதுடைய 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
வேளாங்கண்ணியில் காணாமல் போன மாணவனை தேடும்படியில் ஈடுபட்டிருந்த போது கன்னிக்கோவில் அருகே திண்டுக்கல்லை சேர்ந்த 13 வயதான வீரமலை என்ற மாணவன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளார். பின்னர் இருவர் உடலையும் மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர் இங்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அருகே உள்ள கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக்கூடத்தில் வரும் வாரம் வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக்கூடத்தில் வரும் வாரம் வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.