India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேடசந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து, தனியார் பேருந்து ஒன்று நேற்று 50 பயணிகளுடன் அரவக்குறிச்சிக்கு சென்றது. அப்போது நாகர்கோவிலில் இருந்து, கர்நாடக மாநிலத்துக்கு சாக்குப் பைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, தனியார் பேருந்தின் பின் பகுதியில் மோதியது. இதில் காயமடைந்த 9 பேர் தற்போது வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரு வருகின்றனர்.
மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி அசினாசையது திண்டுக்கல் வருகை புரிந்தார். அவருக்கு திண்டுக்கல் காங்கிரஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் பழனி பைபாஸ் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பிரிவில் கொடியேற்றி வைத்தார். அவருக்கு திண்டுக்கல் வருகை நினைவாக ஆண்டோ நூல் பரிசாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17-08-2024, 19-08-2024 & 20-08-2024 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவித்த பெண்களுக்கான உரிமை தொகை விண்ணப்பிக்கும் முகாம் 3 தினங்கள் நடைபெறுவதாக செய்தி ஒன்று பரவிவருகிறது. இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்ததில் இது உண்மைக்கு புறம்பான செய்தி என தெரியவந்துள்ளது. இதனை நமது தளத்திலும் பதிவிட்டோம். பின்னர், செய்தி உண்மைக்கு மாறானது என தெரிந்தவுடன் அதனை நீக்கிவிட்டோம். இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அனைவருக்கும் SHARE செய்யவும்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று தனியார் பேருந்தின் பின்பக்கத்தில் லாரி மோதியது. இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் பூங்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது “வரட்டாறு தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீ.தர்மர் கோரிக்கை விடுத்தார். அணை கட்டுவது குறித்து எளிதாக முடிவு எடுக்க முடியாது. எனினும் மனு கொடுத்தால் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட பூதமலை பகுதியில் கடந்த 8ஆம் தேதி மரநாயை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கண்ணப்பன், காளிமுத்து ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் காளிமுத்துவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணப்பனை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் சி.கைசர் அலி தலைமையில் அந்தக் கட்சியினர் மனு அளிக்க வந்தனர். இந்து முன்னணி அமைப்பின் மாநில முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் உண்மைக்கு மாறான தகவல், சமூக பதட்டத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sorry, no posts matched your criteria.