Dindigul

News August 20, 2024

திண்டுக்கல்லில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

திண்டுக்கல் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. திண்டுக்கல் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 148 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரம் <<>>

News August 20, 2024

திண்டுக்கல்லில் பசுமை சாம்பியன் விருது

image

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட ந.ஆனந்தகுமாா் மற்றும் நத்தம் என்.புதுப்பட்டியைச் சோ்ந்த ப.தேவந்திரன் ஆகியோருக்கு தலா ரூ .1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை நேற்று ஆட்சியா் பூங்கொடி வழங்கினாா். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளா் குணசேகரன் கலந்துகொண்டார்.

News August 20, 2024

திண்டுக்கல்: தோட்டத்தில் இறந்து கிடந்த மூதாட்டி

image

வடமதுரை: சித்துவார்‌பட்டி வடுகபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர்‌ பெரியக்‌காள்‌ (69). இவரது மகள்‌ காளியம்மாள்‌ தாயைத்‌ தேடி வடுகபட்டி சென்றார்‌. அப்போது வீட்டில்‌ தாய்‌ இல்லாத நிலையில்‌ அவரை பல இடங்களில்‌ தேடினர்‌. இந்நிலையில்‌ நேற்று தனியார்‌ தோட்டத்தில்‌ பெரியக்காள்‌ இறந்து பல நாட்களான நிலையில்‌ உடல்‌ கண்டறியப்பட்டது. இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 19, 2024

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 7 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

News August 19, 2024

வேடசந்தூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

image

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த கருக்காம்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா(22) மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2024

திண்டுக்கல்: விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

தெலுங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவர் அம்ருத் (24) என்பவர், தனது தம்பி மற்றும் 2 நண்பர்களுடன் நேற்று காரில் பொள்ளாச்சி – ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரின் டயர் வெடித்து அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் அம்ருத் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் ககரம் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 19, 2024

பழனியில் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

image

பழனி கீரனுார் அருகே உள்ள புங்கமுத்துரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வேலுச்சாமி (10) நேற்று பழனி அ.கலையம்புத்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். மாலை அக்ரஹாரம் பகுதி அருகே உள்ள கிணற்றருகில் வேலுச்சாமி சென்றபோது எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 18, 2024

திண்டுக்கல் மாவட்ட தலைப்பு செய்திகள்

image

1-திண்டுக்கல் மகிளா காங்கிரஸ் சார்பில்33 % பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற கோரி பேரணி
2-நத்தம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை
3-காசம்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் அபிசேக் வயிற்று வலியால் பலி
4-கொடைக்கானல் கரடிச் சோலை அருவிக்கு அத்துமீறிச் சென்ற 14 பேருக்கு தலா ரூ.1,000 அபராதம்
5- பரளிபுதூர் அருகே மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி

News August 18, 2024

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தென்னிந்திய பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை ) திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆரஞ்சு அலர்ட்) கனமழை முதல் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!