India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் இன்று (ஏப்.10) இறைச்சி விற்பனைக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி ஆகிய இறைச்சிக் கடைகள், ஆடு வதைக்கூடம் இன்று செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயில். அழகர் கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் இங்குமதை செய்வதுண்டு. இங்கு சௌந்தர்ராஜ பெருமாளுடன் உள்ள கல்யாண சௌந்தரவல்லி தாயாரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
வேடசந்தூர் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலன் இன்று(ஏப்.9) வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு செலுத்தும் பாதுகாப்பு பணிக்காக வரும் வழியில் மாரம்பாடி பிரிவு அருகே மயக்கம் வருவதாகக் கூறியுள்ளார். அப்போது, அங்கு இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள DEO, Nurse, Health Inspector பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு . 8th, Any Degree, B.Sc, BDS, D.Pharm, Diploma, DMLT, ITI, MDS, MSW, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.34,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க <
வத்தலகுண்டு அருகே பைக்கில் வந்த கொண்டு இருந்த மரியராஜ்- ராணி தம்பதி மீது, திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியது. இவ்விபத்தில் மனைவி ராணி (54) சம்பவயிடத்திலே உயிரிழந்தார். கணவர் மரியராஜ் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலை செட்டியபட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் ஜெகன், கௌதமன் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் ஏனைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் புகழ்பெற்ற நத்தம் மாரியம்மன் கோயிலுக்கு தனி வரலாறே உண்டு. இந்த மாரியம்மனை ’ரத்தம் காட்டிய அம்மன்’ என்றே ஆரம்பத்தில் அழைத்தனர். அதுவே நாளடைவில் ’நத்தம் மாரியம்மன்’ ஆனது என்கிறார்கள். தம்பதிகள் கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி , மாரியம்மனை வழிபட்டு கோயிலில் கரும்பு தொட்டில் கட்டினால் குழந்தை வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.11, 12, 13 ஆகிய 3 நாள்கள் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதனால் அனைத்து வரிசைகளிலும் கட்டணமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். SHARE பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Business Development & Marketing Executive) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு (ம) பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.25,000 ஆகும். 12 முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<
Sorry, no posts matched your criteria.