India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் ஆக-24, 25 நடைபெறவுள்ளது. ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம்
“சொந்த நூலகங்களுக்கு விருது“ பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள நூலகங்களிலோ அல்லது dlodindigul@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் மாவட்ட நூலக அலுவலர், ஸ்பென்சர் காம்பவுண்டு, பேருந்து நிலையம் அருகில் திண்டுக்கல்“ என்ற முகவரிக்கு தபால் அனுப்பலாம் என
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை வளாகத்தில் அமைந்துள்ள strong ரூமில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முடிந்ததை ஒட்டி 2008 &2009 பெங்களூர் பெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பார் கோடு ஸ்கேன் பண்ணும் பணி அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்ப்பு பணி இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையத்திற்கு இன்று முதல் (21.8.2024) புதிதாக 57 புதிய பேருந்துகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக 57 புதிய பேருந்துகளுக்கு மாலை இடப்பட்டு பேருந்து நிலையத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இதனை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சிறப்பு உரையாற்றி திறந்து வைக்கிறார்.
திண்டுக்கலில் பலத்த மழை காரணமாக நேற்று ஆா்.எஸ்.சாலை, நேருஜிநகா் வட்டச்சாலை, பழனி சாலை பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதித்தது. பழைய கரூா் சாலை ரயில்வே சுரங்கப்பாதையில், மழைநீா் தேங்கியதால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலையிலிருந்து வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்: கொடைக்கானலில் போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட மற்றும் போதை காளான் வாங்க முயன்ற 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போதை காளான் விற்பனையில் ஈடுபட்டாலோ,வாங்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குமரபட்டி – புதூரை சேர்ந்தவர் விவசாயியான காளிமுத்து (69). இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் விட சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் இன்று காலை தேடியுள்ளனர். அப்போது காளிமுத்து கிணற்றில் சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல், மேற்கு தாலுகா அலுவலகத்தில் இன்று பேகம்பூர் பகுதியில் உள்ள பூச்சி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா கேட்டு தரையில் பாயை விரித்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் அலுவலர்கள், பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை திண்டுக்கல் (RDO அலுவலகம்) 6.00 மி.மீ, நத்தம் காமாட்சிபுரம் 2.80 மி.மீ, நிலக்கோட்டை 8.00 மி.மீ, ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி 12.80 மி.மீ, வேடசந்தூர்(தாலுகா அலுவலகம்)1.00 மி.மீ, வேடசந்தூர் (புகையிலை நிலையம்)1.00 மி.மீ, பழனி 51.50 மி.மீ, கொடைக்கானல் ரோஜா தோட்டம் 12.20 மி.மீ என மொத்தம் 147.0 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தென்னிந்திய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் வட்டார பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததை அடுத்து, விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.