Dindigul

News September 6, 2024

திண்டுக்கல்: 35 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

image

திண்டுக்கல் மாநகராட்சியில் நிலுவையிலுள்ள வரிகளை வசூலிக்க மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதன்படி, வருவாய்ப் பிரிவு அலுவலர்கள் மட்டுமன்றி, நகரமைப்பு, சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நீண்ட காலமாக குடிநீர் வரி செலுத்தாத 35 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் நேற்று துண்டிக்கப்பட்டன.

News September 5, 2024

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இணையதளம் www.ksb.gov.in என்ற முகவரியில் 30.11.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

திண்டுக்கல்: லஞ்சம் கேட்டால் தகவல் தெரிவிக்கலாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்டாலோ, வாங்கினாலோ வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தாலோ, மக்கள் எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 0451-2461828, 9498145647, 8300064769, 8300014090 – இல் தொடர்பு கொள்ளலாம்.

News September 5, 2024

திண்டுக்கல்: விஜய் பட ப்ளக்ஸ்,பேனர்கள் அகற்றம்

image

நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர்கள், ஸ்பீக்கர்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லில் மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, மாநகராட்சி சார்பில் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ப்ளக்ஸ் பேனர்கள் இன்று அகற்றப்பட்டன.

News September 5, 2024

திண்டுக்கல்லில் சிலைகளை கரைக்க கூடுதல் இடங்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், வடமதுரை நரிப்பாறை நீர்நிலை, குஜிலியம்பாறை பங்களாமேடு குளம், கன்னிவாடி மச்சகுளம், சின்னாளப்பட்டி தொம்மன்குளம், தாடிக்கொம்பு குடகனாறு, பட்டிவீரன்பட்டி மருதாநதி அணை, எரியோடு நந்தவனக்குளம், சாணார்பட்டி மதனக்குளம், ரெட்டியார்சத்திரம் மாங்கரைகுளம் ஆகிய இடங்களிலும் கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

திண்டுக்கல்லுக்கு மேலும் 7 புதிய பஸ்கள்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல் மண்டலத்திற்கு 59 புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மேலும் 7 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 7 பஸ்களும் நேற்று திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

News September 5, 2024

திண்டுக்கல்லில் 36 கடைகளுக்கு சீல்

image

திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், நிலக்கோட்டை, ஆத்துார், கன்னிவாடி, பழநி, வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. மாவட்ட அலுவலர் கலைவாணி உத்தரவின்படி, பாதுகாப்பு அலுவலர்கள் 36 கடைகளில் 265 கிலோ தடை பொருட்களை பறிமுதல் செய்து, கடைகளை சீல் வைத்ததோடு ரூ.21 லட்சம் அபராதம் விதித்தனர்.

News September 4, 2024

திண்டுக்கல்: விநாயகர் சிலை வைக்க தடை

image

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாறைப்பட்டி பொதுமக்களுடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் சக்திவேல் பேசுகையில்:- பாறைப்பட்டியில் இந்து அமைப்பினர் யாரும் விநாயகர் சிலை வைக்க கூடாது என்று உத்தரவிட்டார். உடன் உதவி மாவட்ட கண்காணிப்பாளர் சிபின், புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சவுந்தர்யன் இருந்தனர்.

News September 4, 2024

திண்டுக்கல்லில் எஸ்.பி ஆபிஸில் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். உடன் போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.

News September 4, 2024

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வருகின்ற செப்-7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இரசாயன வர்ணம் பூசப்படாத விநாயகர் சிலைகளை கரைக்கவும், விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு கொண்டாடிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!