Dindigul

News September 8, 2024

திண்டுக்கல்: காதலியை சுட்ட காதலன்

image

திண்டுக்கல்: நத்தம் அருகே 17 காதலியை, 19 வயது காதலன் செல்லம் என்பவர் தனது சித்தப்பாவின் AIR GUN-ஆல் சுட்டதில் சிறுமி படுகாயமடைந்தார். காதலர்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்த வேறுபாட்டில், காதலியை சுட்ட காதலன் அச்சத்தில் தானும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News September 8, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) திண்டுக்கல் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

திண்டுக்கல்: அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்: 5 பேர் காயம்

image

கொடைக்கானல் பைன் மரக்காட்டில் நேற்று சுற்றுலா வேன் ஒன்று தாழ்வான பகுதியில் வந்த போது பிரேக் பிடிக்காமல் மற்றொரு வேன் மீது மோதியது. இதை தொடர்ந்து 5 கார்கள், டூவீலர் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆந்திராவை சேர்ந்த மூவர், துாத்துக்குடி வேன் டிரைவர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் கொடைக்கானல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 8, 2024

திண்டுக்கல்லில் காதலன் கொலை: தந்தை கைது

image

குன்னுவாரன்கோட்டையை சேர்ந்தவர் கபிலன் (24). இவர் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகளை காதலித்தார். கபிலன் காதலித்த பெண் தங்கை உறவு முறை என்பதால் மணிகண்டன் கண்டித்துள்ளார். கபிலன் காதலை கைவிட மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மணிகண்டன் கபிலனை அரிவாளால் வெட்டியதில் அவர் இறந்தார். இதையடுத்து விருவீடு போலீசார் மணிகண்டனை (46) கைது செய்தனர்.

News September 8, 2024

திண்டுக்கல்: ஓவியரை அழைத்து பாராட்டிய இளையராஜா

image

திண்டுக்கல்: பழனியை சேர்ந்த ஓவியர் அன்புச்செல்வன் என்பவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய பாடல்களை வைத்து ஓவியம் வரைந்திருந்தார். இதனை அறிந்த இளையராஜா நேற்று அன்புச்செல்வனை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது இளையராஜாவிற்கு தான் வரைந்த ஓவியத்தை அவர் பரிசாக வழங்கினார். இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓவியர் அன்புசெல்வனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News September 7, 2024

திண்டுக்கல்: தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள வாய்ப்பு

image

அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள, விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கட்டணம் (ரூ.200) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள திண்டுக்கல், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

பழனியில் ரூ.1400 கோடியில் பணிகள்: எம்எல்ஏ தகவல்

image

பழனி தொகுதியில் ரூ.1400 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளதாக தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான செந்தில்குமார் தெரிவித்தார். மாவட்ட அவைத்தலைவர் காமாட்சிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன், நகராட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, தி.மு.க. நகர செயலாளர் வேலுமணி, முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 7, 2024

திண்டுக்கல்லில் 10 பேர் மீது வழக்குப்பதிவு

image

திண்டுக்கல் திருச்சி ரோட்டில் வஉசி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் வந்த அரசு பேருந்தை சிலர் வழிமறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, பேருந்து மீது ஏறி நடனம் ஆடினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 10 பேர் மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News September 7, 2024

திண்டுக்கல்லில் ஹாக்கி லீக் போட்டிகள்

image

ஹாக்கி திண்டுக்கல் அமைப்பு சாா்பில், 2024-25-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆண்களுக்கான இந்த லீக் போட்டிகளில், பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு ஹாக்கி வீரா்கள் பங்கேற்கலாம். அணிகளுக்கான பதிவுகள் வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறும். விவரங்களுக்கு 7871468551, 9894270685 எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஹாக்கி திண்டுக்கல் அமைப்பின் தலைவா் காஜாமைதீன் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: 3 பேர் காயம்

image

வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் கார் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த தொழிலாளர்கள் பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!